Tuesday, June 24, 2014

மகாராணியின் வங்கியில் ஓசாமா பின் லேடனுக்கு அக்கவுன்ட் இருந்ததா : பரபரப்பு செய்தி !




பிரித்தானிய அரச குடும்பத்தினருக்கு வங்கி கணக்கு உள்ள அதே வங்கியில் ஒசாமா பின்லேடனுடன் கணக்கு இருந்தா என்று ஒரு சர்ச்சை எழுந்துள்ளது. காரணம் மகாராணியின் வங்கி கணக்கு உள்ள அதே வங்கியில் ஒசாமா பின்லேடனுக்கும் கணக்கு இருந்தாக ஆதாரத்துடன் சிலர் கூறுகின்றனர்.
ஆயினும் இந்த சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் முகமாக குறித்த அந்த வங்கி மறுப்பு தெரிவித்துள்ளது. அமெரிக்காவால் கொல்லப்பட்ட ஒசாமா பின்லேடனுக்கு மகாராணியின் வங்கியில் வைப்பு செப்பு வங்கியில் கணக்கு இருந்ததாக ஐரோப்பிய பத்திரிகைகள் தெரிவித்தன.
கேய்மன் தீவிலிருந்து ஜேர்மனியின் ஹம்பக் துறைமுகத்தை வந்தடைந்த கட்ஸ் வங்கியின் ஆவணங்களை ஜேர்மனிய சுங்க இலாக துறையினர் கைப்பற்றியுள்ளதனை தொடர்ந்து இந்த குற்றச்சாட்டை எழுந்துள்ளது. இவ்வாறு கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் அனைத்தும் ஏறத்தாழ இரண்டு கெண்டைனர்களில் 14000 ஆவணங்கள் என்ற கணக்கிடப்பட்டுள்ளது. குறித்த இந்த வங்கி கரிப்பியனில் உள்ள தனது வங்கி கிளையை முற்றாக மூடி சகல தரவுகளையும் nஐனிவாவில் உள்ள தகவல் நிலையத்திற்கு முழுத்தரவையும் அனுப்பியுள்ளது.
ஹம்பக் துறைமுகத்தில் கைப்பற்றப்பட்ட ஆவணங்களில் பின்லேடனுடன் தொடர்புபட்ட ஆவணங்களும் இருந்துள்ளன என்பது மிகவும் அதிர்ச்சி தகவலாகும். ஆயினும் கட்ஸ் வங்கி அத்தகைய ஒரு பயங்கரவாதியுடன் தங்களுக்கு தொடர்பு இருந்ததில்லை என்பதனை மறுத்தே வருகின்றது. தனியார் வங்கி ஒன்றின் பேச்சாளர் கூறுகையில் எங்கள் வங்கி வாடிக்கையாளர்கள் பற்றிய விசாரணைகள் தொடர்பில் ஏதுவும் தெரியாது. ஆயினும் அவர்கள் யார் என்பது தெரிந்து கொள்ள உரிய அதிகாரிகள் மேற்கொள்ளும் விசாரணையை அனுமதிக்கத்தான் வேண்டும் என்றார்.
மறுபுறத்தே எந்தவொரு சந்தர்ப்பத்திலும் ஒசாமா பின்லேடனுக்கோ அன்றி அவரது நேரடி குடும்பத்தினருக்கோ வங்கியில் கணக்கு இருப்பது தெரியாது. காரணம் தனிநபர் ஒருவரின் கணக்கு முறைமை பற்றி எங்களால் ஆய்வு செய்ய முடியாது என்று தெரிவித்தார்.
ஓசாமா பின்லேடனும் ஒரு வசதியான குடும்பத்தை சேர்ந்தவர் என்றும் கூறப்படுகின்றது.
அனைவற்றிக்கும் மேலாக ஒசாமா பின்லேடன் சவுதி அரேபியாவைச் சேர்ந்த மிகவும் பணக்கார குடும்பத்தில் இருந்த வந்தவர். அவரது தந்தை மொகமட் -1967அம் ஆண்டு இறந்தவர். அவருக்கு 22 மனைவிகளுக்கு 50 பிள்ளைகள் உள்ளனர். இந்த நிலையில் 1990களிலேயே பயங்கரவாதத்துடன் உள்ள தொடர்புகள் காரணமாக குடும்ப உறவுகளை துண்டித்து கொண்டவர். ஓசாமா பின்லேடனின் மூத்த மகன் அப்துல்லா சவுதி அரேபியாவில் ஒரு விளம்பர நிறுவனம் நடத்திவருகின்றார். அவருக்கு பயங்கரவாதிகளுடன் தொடர்புகள் இல்லை. 1994ஆம் ஆண்டு பின்லேடனின் பிரஜா உரிமை பறிக்கப்பட்டது. அவருக்கு 5 மனைவிகள். அமெரிக்காவினால் ஒசாமா பின்லேடன் அவர்களில் 3 மனைவியருடன் வாழ்ந்து வந்துள்ளார். இவை தவிர இவருக்கு 20 பிள்ளைகள் உள்ளனர் என்று அறியப்படுகின்றது.
குறித்த இந் கடஸ் வங்கி 1692 அம் ஆண்டிலிருந்த ராஜ குடும்பத்து கணக்கு வைப்புகளை மட்டுமே கொண்டிருந்தது ஆனால் அண்மைய தசாப்தங்களில் மட்டுமே இத்தகைய புதிய பண வரவுகளை ஏற்றுக்கொள்ள ஆரம்பித்துள்ளது.
பிரபலமான சர்வதேச குற்றவாளிகள் அல்லது முறையற்ற வெளிநாட்டு முதலீடு எனும் பெயரில் சிலர் கணக்குகள் ஆரம்பித்து அவர்களின் முறையற்ற நிதி நடவடிக்கை தொடர்பில் 2012ஆம் ஆண்டில் 8.75 மில்லியன் பவுண்டுகள் தண்டமாக அறவிப்பட்டிருந்தது.
2007- 201 ஆம் ஆண்டுகளின் காலப்பகுதிகளில் வங்கிக்கான பண வரவுகளின் முலாதாரத்தை ஆய்வு செய்ய தவறிய காரணத்தினால் லிபியா சிரியா மற்றும் சிம்பாவே போன்ற நாடுகளில் இருந்தும் பணம் வைப்பு செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது

No comments:

Post a Comment