Monday, June 30, 2014

சிங்கள டாக்டர் பெண்மனி மண்டையில் அடித்து கணவனைக் கொன்றார் !

ஆனந்தியின் பாதுகாப்பு விலக்கப்பட்டதும் 2 மர்ம மனிதர்கள் தன்னை பின் தொடர்வதாக கூறுகிறார் !

[ Jun 30, 2014 12:00:00 AM | வாசித்தோர் : 4860 ]
வடமாகாண சபை உறுப்பினர் அனந்தி சசிதரன், சில நாட்களாக மர்ம நபர்கள் தன்னைப் பின் தொடர்வதாக தெரிவித்துள்ளார். அண்மையில் வெளிநாடு சென்று திரும்பியதில் இருந்து இரண்டு மர்ம நபர்கள் தன்னை தொடர்ச்சியாக பின்தொடர்வதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார். அவர்கள் பயன்படுத்தும் இரு சக்கர வாகனம் மேல் மாகாண பதிவைக் கொண்டது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். தற்போதைய நிலையில் மாகாண சபை உறுப்பினர் அனந்தி சசிதரனுக்கு வழங்கப்பட்டிருந்த பொலிஸ் பாதுகாப்பை அரசாங்கம் மீளப் பெற்றுவிட்டது.
இது தொடர்பாக அவர் வட மாகாண சபையில் விசேட உரையொன்றை நிகழ்த்தியிருந்ததுடன், முதலமைச்சரிடமும் முறைப்பாடு செய்திருந்தார். இவ்வாறான நிலையில் மர்ம நபர்கள் மூலம் தன்னை அச்சுறுத்தி, தனது செயற்பாடுகளை முடக்க அரசாங்கம் நடவடிக்கைகளை மேற்கொண்டிருக்கலாம் என்றும் அவர் சந்தேகம் தெரிவித்துள்ளார். எனினும் இவ்வாறான அச்சுறுத்தல்கள் மூலமாக தன்னை அடிபணிய வைக்க முடியாது என்று தெரிவித்துள்ள அனந்தி சசிதரன், தமிழ் மக்களின் உரிமைக்கான தனது அரசியல் போராட்டம் தொடரும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
http://www.athirvu.com/newsdetail/307.html

சிங்கள டாக்டர் பெண்மனி மண்டையில் அடித்து கணவனைக் கொன்றார் !

[ Jun 30, 2014 02:31:35 PM | வாசித்தோர் : 5045 ]
கடந்த செவ்வாய்கிழமை அன்று மேற்கு அவுஸ்திரேலியாவில் உள்ள கிறடல்-டவுன் என்னும் நகரில் இருந்து வந்த அவசர அழைப்பை அடுத்து, பொலிசாரும் பரா மெடிக்ஸ் பிரிவினரும் குறித்த வீட்டிற்கு விரைந்து சென்றார்கள். அங்கே ரத்தவெள்ளத்தில் இருந்த மருத்துவர் அத்துகோரளவை அவர்களால் காப்பாற்ற முடியவில்லை. தலையில் பலத்த அடி காரணமாக அவர் உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளார்கள். இறந்த அத்துகோரளவின் மனைவி(34) தினேந்தரா அத்துகோரளவும் ஒரு மருத்துவர் ஆவார். பின்னர் கொலைக்குற்றம் சாட்டப்பட்ட நிலையில் அவரை அவுஸ்திரேலிய பொலிசார் கைதுசெய்து சிறையில் அடைத்தார்கள். இந்த தம்பதிகள் சிங்களவர்கள் என்றும், இவர்கள் இலங்கையை பிறப்பிடமாகக் கொண்டவர்கள் என்றும் பொலிசார் தற்போது உறுதிசெய்துள்ளார்கள்.
இது இவ்வாறு இருக்க, கடந்த வெள்ளியன்று மனைவியை நீதிமன்றில் பொலிசார் ஆஜர்படுத்தியுள்ளார்கள். அவர் எந்த ஒரு வாக்குமூலத்தையும் கொடுக்கவில்லை. அதேவேளை பிணைக்கும் அவர் விண்ணப்பிக்கவில்லை என்று கூறப்படுகிறது. சம்பவன் தினத்தன்று, இவர்கள் வீட்டில் சத்தம் கேட்டதாகவும் அங்கே பெரிய வாக்குவாதம் இடம்பெற்றதாகவும் அயலவர்கள் தெரிவித்துள்ளார்கள். இந்த மருத்துவர்கள் இருவரையும் தமக்கு ஏற்கனவே நன்றாகத் தெரியும் என்று கூறியுள்ள அயலவர்கள், இவர்கள் வீட்டில் வழமைக்கு மாறாக சத்தம் கேட்டதால், தாம் பொலிசாருக்கு அறித்ததாக தெரிவித்துள்ளார்கள். பொலிசார் விரைந்து வந்தும் கணவரை காப்பாற்ற முடியவில்லை.
இவர்கள் வீட்டிற்கு அருகாமையில் உள்ள, மருத்துவமனை ஒன்றிலேயா குறித்த தம்பதிகள் வேலைசெய்து வந்துள்ளார்கள். மனைவியே கணவனை அடித்துக் கொலைசெய்துள்ள விடையம் அந்த மருத்துவமனையில் வேலைபார்கும் பலரை அதிர்சிக்கு உள்ளாக்கியுள்ளது என்றும் அதிர்வு இணையம் மேலும் அறிகிறது.
http://www.athirvu.com/newsdetail/310.html

No comments:

Post a Comment