Wednesday, June 25, 2014

உலகையே தன் நடனத்தால் ஆட்டி வைத்தவர்! (வீடியோ இணைப்பு)

உலகையே தன் நடனத்தால் ஆட்டிவைத்த மைக்கேல் ஜாக்சன் இறந்த தினம் இன்று.
அமெரிக்க பொப் இசைப் பாடகர், நடன இயக்குனர், பாடல் ஆசிரியர், தொழில் அதிபர், என பல முகங்கள் கொண்ட இவர், 1958ம் ஆண்டு ஆகஸ்ட் 29ம் திகதி புகழ்பெற்ற இசைக்குடும்பத்தில் பிறந்தார்.
ஆரம்பத்தில் தனது சகோதரர்களுடன் இணைந்து இசைக்கச்சேரி நடத்திய இவர், பின்னர் 1971ம் ஆண்டு தனியாக இசைக்கச்சேரி நடத்த ஆரம்பித்தார்.
அன்று முதல் மக்கள் மத்தியில் பிரபலமடைந்த இவர், கிங் ஆப் பொப் என்ற பெயரால் அழைக்கப்படுகிறார்.
இவரால் வெளியிடப்பட்ட இசைத்தொகுப்புகளில் ஐந்து உலகெங்கும் பெருமளவில் விற்பனை செய்யப்பட்டதாகும்.
1982-ல் வெளிவந்த திரில்லர் உலகில் பெருமளவில் விற்பனை செய்யப்பட்ட இசைத் தொகுப்புகளின் பட்டியலில் முதலாம் நிலையில் உள்ளது. உலகெங்கிலும் உள்ள பல தரப்பு மக்களின் மத்தியில் நாற்பது ஆண்டு காலமாக பிரபலமானவராக வாழ்ந்து வந்துள்ளார்.
பாடல் எழுதி, அதற்கு இசையமைத்து, பாடலுக்கு ஏற்றாற் போல் நடனம் ஆடுவது, இடை இடையே நடிப்பு என அனைத்தும் கலந்த 'பொப்' என புதிய நடனத்தை அவர் படைத்தார்.
பல சமூக சேவைகளுக்கு உலக முழுவதிலும் கச்சேரிகளை நடத்தி நிதியுதவி செய்துள்ளார். இவ்வாறு பல்வேறு புகழ்களுக்கு மத்தியில் வாழ்ந்து வந்த இவர் குழந்தைகளுடன் உடலுறவு கொண்டார் என்று 1993ல் குற்றம் சாட்டப்பட்டார்.
பின்னர், இந்த குற்றம் பொய்யானதே என்று நிரூபிக்கப்பட்டாலும், அதனைத் தொடர்ந்து, இவர் மேற்கொண்ட பல்வேறு பிரச்சனைகளால் 17 ஆண்டுகள் இசைக்கச்சேரி செய்யாமல் இருந்தார்.
பின்னர் 17 ஆண்டுகள் கழித்து மீண்டும் திரும்பி வந்து இசை நிகழ்ச்சி நடத்தியபோதும் மக்கள் மத்தியில் இவருக்கான மதிப்பு குறையவேயில்லை.
இன்று வரை அமெரிக்க பண்பாட்டில் இவர் ஒரு செல்வாக்கு பெற்றவராகவே கருதப்படுகிறார்.
2009ம் ஆண்டு யூன் 25ம் திகதி லாஸ்ஏஞ்சலஸ் நகரில் உள்ள தனது வீட்டில் மர்மமான முறையில் இறந்தார். அதேநேரம் அளவுக்கு அதிகமான சக்தி வாய்ந்த மாத்திரை வழங்கியதுதான் அவரது மரணத்திற்கு காரணம் கண்டறியப்பட்டது.
இவர் மறைந்தாலும், இவரால் உருவாக்கப்பட்ட நடனங்கள் இன்று வரை ஆங்காங்கே அரங்கேறிக் கொண்டுதான் இருக்கின்றன.
http://www.newsonews.com/view.php?22oMM303lOe4e2BnBcb280Cdd308Wbc3nBze43Old0226AA3

No comments:

Post a Comment