கலிபோர்னியாவில் நேற்று நடந்த 800மீ ஓட்டப்பந்தயத்தில் கலந்துகொண்டு 2நிமிடங்கள் 32 நொடிகளில் இலக்கை அடைந்தார் ஒன்பது மாத கர்ப்பிணி ஒருவர். இதுகுறித்து கருத்து கூறிய டாக்டர்கள் கர்ப்பிணிகள் தகுந்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்துகொண்டு ஓட்டப்பந்தயத்தில் கலந்துகொள்வதில் எவ்வித பிரச்சனையும் இல்லை என்று கூறியுள்ளனர்.
ஐந்துமுறை ஒலிம்பிக்கில் சாம்பியன் பட்டம் பெற்ற 34 வயது Alysia Montano என்ற பெண், நேற்று கலிபோர்னியாவில் நடந்த 800 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் ஒன்பது மாத கர்ப்பத்துடன் ஓடி சாதனை புரிந்துள்ளார். இவர் 800 மீட்டர் தூரத்தை வெறும் 2 நிமிடங்கள் 32 வினாடிகளில் கடந்து சாதனை புரிந்தார். ஓட்டப்போட்டியில் கலந்து கொள்வதற்கு முன்னர் மருத்துவர்களிடம் ஆலோசனை பெற்று வயிற்றை இறுக்கமாக பிடித்துக்கொள்ளும் ஆடையணிந்து இந்த போட்டியில் Alysia Montano கலந்துகொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
பொதுவாக கர்ப்பமான நேரத்தில் நடைப்பயிற்சி செய்வதற்கு மட்டுமே டாக்டர்கள் ஆலோசனை கூறுவார்கள். ஆனால் Alysia Montano ஓட்டப்பந்தய வீராங்கனை என்பதால் சில ஆலோசனைகள் கூறி வயிற்றில் இருக்கும் குழந்தைக்கு எவ்வித ஆபத்தும் நேராதவண்ணம் அதற்கென சிறப்பு உடைகள் அணிந்து அவரை ஓடுவதற்கு மருத்துவர்கள் அனுமதித்தனர். இவர் சாதாரணமாக கர்ப்பிணியாக இல்லாத நேரத்தில் இதே தூரத்தை கடந்த நேரத்தை விட இந்த நேரம் வெறும் 35 வினாடிகள் மட்டுமே அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது. 800 மீட்டர் தூரத்தை கர்ப்பமான வயிற்றுடன் கடந்த இவரை சக போட்டியாளர்கள் பாராட்டினர்.Usa-MotherUsa-Mother-01Usa-Mother-02Usa-Mother-03