400 கோடி பெறுமதியான வானூர்தியைக் கண்டுபிடித்திருக்கும் இவரைத் தெரிகின்றதா? இவர் ஒரு சிறிலங்காத் தமிழர் என்பதில் தமிழ் இனம் பெருமை கொள்கின்றது. பல கோடிக்கணக்காக நிதி திரட்டிக்கொள்வதற்கு உதவும் தொழில் நுட்பத்தைக் கண்டுபிடித்த பெருமைக்குரியவர் சிறிலங்காவில் தென்மராட்சியைச் சேர்ந்த சிதம்பர நாதன் சபேசன்.
இவர் 1984ம் ஆண்டில் சிறிலங்காவில் பிறந்து, சாவகச்சேரி இந்துக்கல்லூரி, யாழ் இந்துக் கல்லூரியல் ஆகியவற்றில் தனது ஆரம்பக் கல்வியை மேற்கொண்டிருக்கின்றார் எனத் தெரிகிறது.
பின்பு மொற்ட்டுவப் பல்கலைக் கழகத்தில் தனது பொறியியல் கல்வியை மேற்கொள்கையில் முதலாண்டு கல்வி கற்கும்போது புலமைப் பரிசு பெற்று பிரித்தானியா சென்றிருக்கின்றார். அங்கு செபீல்ட் பல்கலைக்கழகத்தில் மின்னணுப் பொறியியல் பட்டப்படிப்பினை மேற்கொண்டிருக்கின்றார் எனவும், பின்பு 2007ல் பிரித்தானியாவில் மிகச்சிறந்த அறிவியல் மாணவானத் தெரிவாகிய 18பேரில் இவரும் ஒருவராகத் தெரிவாகியிருக்கின்றார் எனவும் தெரியவருகிறது.
அதன் பின்பு கேம்பிறிட்ஷ் பல்கலைக் கழகத்தில் முதுகலைப் பட்டத்தையும் பெற்றிருக்கின்றார்.
கடந்த வருடம் அமெரிக்க அதிபர் ஒபாமா அவர்கள் தென்மராட்சியில் பிறந்த சிவநாதனை யழைத்து அவரது தொழில் நுட்பச் சாதனையைப் பாராட்டியிருக்கின்றார் என்பதை வாசகர்களுக்கு நினைவுபடுத்துகின்றோம்.
தற்போது சிதம்பரநாதன் சபேசன் அவர்களைப் பிரித்தானியா பாராட்டுகின்றது. இவ்வாறான திறமையுள்ளவர்களது திறமைகள் வெளிச்சத்திற்கு வரவேண்டும் எனக் கனடா மிரர் வாழ்த்துவதுடன் முயற்சியும் செய்கின்றது.Hali 2
Hali 3