Tuesday, May 27, 2014

யூத எதிர்ப்பாளர்களின் தலைவிரித்தாடும் அட்டகாசம்: பிரான்சில் பதற்றம்


பிரான்சில் யூத எதிர்ப்பாளர்களால் நடந்த தாக்குதல் சம்பவத்தில் இருவர் பாதிப்பிற்குள்ளாகியுள்ளனர்.
கடந்த 24ம் திகதி பெல்ஜியத்தில் நடந்த துப்பாக்கிச்சூட்டு சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதனையடுத்து ஒரு மணி நேரத்திலேயே, பிரான்ஸ் தலைநகரான பாரிஸிலும் 19 வயது மற்றும் 23 வயது உடைய இரு சகோதரர்களை இரண்டு வடக்கு ஆப்ரிக்கர்கள் தாக்கியுள்ளனர்.
பாரிஸ் நகரில் நடந்து சென்ற இந்த இரு சகோதர்களையும், அங்கு வந்த இரு வடக்கு ஆப்ரிக்கர்கள் சுற்றிவளைத்து சராமாரியாக தாக்கியுள்ளனர்.
இந்த தாக்குதலில் 23 வயதான மூத்த சகோதரர் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கபட்டுள்ளார்.
இதுகுறித்து சகோதரர்களில் ஒருவர் கூறுகையில், நாங்கள் தொப்பி அணிந்திருந்தால் அவர்கள் எங்களை யூத மதத்தவர் என கண்டறிந்து தாக்கியுள்ளனர் என கூறியுள்ளார்.
மேலும் உலகின் 3வது அதிகமான யூத மக்களை கொண்ட பிரான்சில் இது போன்ற சம்பவம் அதிகம் நடந்து வருவது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment