Thursday, May 29, 2014

கல்முனை மாணவர்களைத் தூண்டிவிட்டு ஆசிரியையை தூஷித்த ஆசிரியர்!

ஒவ்வொரு நாளும் எனது கைத்தொலைபேசிக்கு அநாமோதய அழைப்புக்கள் வந்தன. அவர்கள் யார் என்பதை என்னால் அடையாளம் காண முடியாதிருந்தது. எனக்கு அழைப்பு எடுப்பவர் கூடாத வார்த்தைப் பிரயோகங்களைப் பயன்படுத்தி பேசிக்கொண்டே இருப்பார். எனினும் தொடர்ந்து பேசியதன் காரணத்தினால் ஓரளவு என்னால் இந்தக் குரலை அடையாளம் காணமுடிந்தது.

கல்முனை பிரதேச பாடசாலை ஒன்றில் மாணவர்களைத் தூண்டி ஆசிரியை ஒருவரைக் கைத்தொலைபேசி மூலம் தூசிக்கச் செய்தார் என்று கூறப்படும் ஆசிரியர் ஒருவர் கல்முனை பொலிஸாரினால் கைது செய்யப்பட்டு விசாரிக்கப்பட்டு வருகின்றார். குறித்த பாடசாலையில் கல்வி கற்பிக்கும் சம்பந்தப்பட்ட ஆசிரியை கல்முனை பொலிஸ் நிலையத்தில் நேற்று முறைப்பாடு செய்ததை அடுத்தே குறித்த ஆசிரியர் கைது செய்யப்பட்டிருக்கிறார் எனக் கல்முனை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி தெரிவித்தார் இந்த சம்பவம் தொடர்பாக அந்த ஆசிரியை செய்த முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளவை வருமாறு:
அது எமது பாடசாலையில் கல்வி கற்கும் மாணவன் ஒருவனாக இருக்கலாம் எனச் சந்தேகித்தேன். அதன் பிரகாரம் பாடசாலையில் வைத்து அம்மாணவனை அழைத்து ‘நீர் ஏன் எனக்கு தொலைபேசியில் கூடாத வார்த்தைகளால் பேசுகின்றீர்?’ எனக் கேட்டதற்கு குறித்த ஆசிரியர் தான் என்னுடைய கையடக்கத் தொலைபேசியில் உங்களுக்குப் பேச சொன்னார் எனத் தெரிவித்தார். இப்படி ஆசிரியை தமது முறைப்பாட்டில் குறிப்பிட்டிருந்தார்.
இதனை அடுத்து சம்பந்தப்பட்ட மாணவருடன் மேலும் இரு மாணவர்கள் கைது செய்யப்பட்டனர் . மாணவர்களின் வாக்குமூலத்தை அடுத்தே மேற்படி ஆசிரியர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டு விசாரிக்கப்படுகின்றார் எனவும் இன்று நீதிமன்றில் அவர் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார் எனவும் கல்முனை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி ஏ.டபிள்யு. ஏ.கப்பார் தெரிவித்தார்.
http://www.jvpnews.com/srilanka/71119.html

No comments:

Post a Comment