Thursday, May 22, 2014

யேர்மனி பசுமைக்கட்சியின் முன்னணி வேட்பாளர் இலங்கைத்தமிழர் . திரு.ஜெயரட்னம் கனீசியஸ்



உள்ளுராட்சி சபைகளுக்கான தேர்தலில் யேர்மனி பசுமைக்கட்சியின் முன்னணி வேட்பாளராகத் திரு.ஜெயரட்னம் கனீசியஸ் அவர்கள் போட்டியிடுகின்றார்.
இவர் யேர்மனி NRW மாநிலத்தில் இம்மாதம் மே.25ம் திகதி (25.05.2014) ஐரோப்பிய பாராளுமன்றத் தேர்தலுடன் நடைபெறவுள்ள உள்ளுராட்சிச் சபைகளுக்கான தேர்தலில் பசுமைக்கட்சி சார்பில் (Bündis 90/ Die Grünen) கெம்பன் (Kempen) நகரசபைக்கு ஆறாவது இடத்திலும் கிறைஸ் வியர்சன் (Kries Viersen) வட்டார சபைக்கு நான்காவது இடத்திலும் போட்டியிடுகின்றார்.
2004ம் ஆண்டு நடைபெற்ற உள்ளுராட்சி சபைகளுக்கான தேர்தலில் முதல் முறையாக போட்டியிட்டு கெம்பன் நகர சபை உறுப்பினராக வெற்றி பெற்ற இவர் 2009 ம் ஆண்டுத் தேர்தலில் கிறைஸ் வியர்சன் (Kries Viersen) வட்டாரசபை உறுப்பினராகவும் போட்டியிட்டு இரட்டை ஆசனங்களைக் கைப்பற்றியது பெருமைக்குரிய விடயமாகும்.
இவரது தீவிர முயற்சியினால் யேர்மன் பசுமைக்கட்சியின் மத்திய மாநாட்டில் 2009ம் ஆண்டில் பேர்லினிலும் 2014ம் ஆண்டில் (Dreseden) டிறசன் நகரிலும் பசுமைக்கட்சி ஈழத்தமிழருக்கு ஆதரவான தீர்மானத்தை நிறைவேற்றியமை குறிப்பிடத்தக்கதாகும்.
2013 பேர்லினில் நடந்த பசுமைக் கட்சியின் மத்திய மாநாட்டில் அதன் வெளியுறவுக் கொள்கை நிறைவேற்றப் பட்டபோது அதில் அவுஸ்திரேலிய இலங்கை அகதிகள் அவலம் கண்டிக்கப் பட்டமை இவரது விண்ணப்ப முயற்சிக்குக் கிடைத்த வெற்றியாகும். இது போன்று இவரது பல வெளிநாட்டவர் அகதிகள் பற்றிய விண்ணப்பப் பிரேரணைகள் பசுமைக்கட்சியின் மத்திய மாநில மாநாடுகளில் விவாதத்திற்கு எடுக்கப்பட்டு நிறைவேற்றப் பட்டமையின் பலனாகவே பசுமைக்கட்சி இம்முறையும் தனது முன்னணி வேட்பாளர்களுள் ஒருவராக இவரை நிறுத்தியுள்ளது.
தமிழ்மக்கள் தமது வாக்குகளை பசுமைக் கட்சிக்கு வழங்குவதன் மூலம் தமது வாக்குகளை இவருக்கு அளித்து இவரை வெற்றியுடன் அனுப்பி வைப்பது பெருமைக்குரியதே.
இவர் பசுமைக் கட்சியின் மத்திய மாநாட்டில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பிரதிநிதிகள் நிருபர்கள் மத்தியில் ஆற்றிய உரையை பின்வரும் பகுதியில் கேட்க முடியும்.
யேர்மனியில் பசுமைக்கட்சி வெளிநாட்டவர் மற்றும் அகதிகள் விடயத்தில் மிகுந்த அக்கறை காட்டி வருவது குறிப்பிடத்தக்கதாகும்.
http://www.tamilwin.com/show-RUmsyFRWLZlo5.html

No comments:

Post a Comment