Thursday, May 22, 2014

ஓடிய போரூந்தை நடு வீதியில் விட்டுச் சென்ற சாரதியால் பரபரப்பு -!இதுதான் வளர்ச்சி அடைந்த நாடுகள் கொடுத்த சுதந்திரம்!

பேரூந்து சாரதி ஒருவர் பயணிகளுடன் இயங்கிய நிலையில் வண்டியை கைவிட்டுச் சென்ற சம்பவம் கடந்த செவ்வாய்கிழமை இடம்பெற்றுள்ளது. வண்டியில் 20 பயணிகள் இருந்துள்ளனர். கிட்டத்தட்ட 30-நிமிடங்கள் வரை அவர்கள் தனித்துவிடப்பட்டுள்ளனர்.
விக்டர் புலாறியோ என்பவர் வாகன சாரதி விட்டு சென்ற பேரூந்தில் பயணம் செய்தவர்களில் ஒருவர். 20-பயணிகளையும் எந்தவித எச்சரிக்கையும் இன்றி தனித்துவிட்டுச்சென்ற சாரதியின் நடவடிக்கையை தன்னால் நம்பமுடியவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.
கிழக்கு நோக்கி சென்ற 32- எக்லிங்ரன் மேற்கு பேரூந்தின் சாரதி கூர்மையான திருப்பத்தை சிவப்பு விளக்கில் செய்து நேர தாள்களை நிரப்பி பிற்பகல் 1.30 மணியளவில் வண்டியை எக்லிங்டன் அவெனியு மேற்கு ரென்ந்வி டிரைவ்வில் தீடீரென இழுத்தார். அவர் ஒருவித அவசரத்தில் இருந்தார். என விக்டர் தெரிவித்தார்.
சந்தியை அடைந்ததும் நேர தாளில் கிறுக்கினார். பின்னர் தனது இருக்கையை விட்டு எழுந்து வண்டியில் இருந்து இறங்கி அக்கம் பக்கம் பார்த்துவிட்டு வேறொரு பேரூந்தில் ஏறி வீடு சென்று விட்டார். தன்னுக்குள்யேயே வேறு சாரதி வருகின்றார் என கூறிக்கொண்டார் எனவும் விக்டர் கூறியுள்ளார்.
சாரதியும் வாகனத்திற்கு திரும்பவில்லை. அவருக்கு பதிலாக வேறு சாரதியும் வரவில்லை. 20-நிமிடங்களிற்கு பின்னர் விக்டர் TTC வாடிக்கையாளர் சேவையை அழைத்துள்ளார். அவர்கள் மேற்பார்வையாளருக்கு தெரிவிப்பதாக கூறியுள்ளனர். பின்னர் மேலதிகாரி என ஒருவர் வந்து வண்டியை எடுத்தார்.
சிறிது நேரத்தின் பின்னர் வாகனம் சேவையில் இல்லை என அறிவிக்கப்பட்டு பயணிகள் வெளியேறும் படி கேட்டுக்கொள்ளப் பட்டனர்.
இச்சம்பவத்தை விக்டர் தனது ஐபோனில் பதிவுசெய்துள்ளார். ஏன் கமரா வைத்திருக்கின்றாய் என மேலதிகாரி என கூறி பேரூந்தில் ஏறியவர் விக்டரிடம் கேட்டுள்ளார். இது சம்பந்தமாக ரொறொன்ரோ போக்குவரத்து கமிஷன் விசாரனை செய்து வருகின்றது.
ttc

ttc1
- See more at: http://www.canadamirror.com/canada/26438.html#sthash.52FlkT4P.dpuf

No comments:

Post a Comment