Wednesday, May 28, 2014

கோப முகத்துடன் ஆற்றில் கண்டுடெடுக்கப்பட்ட சிலை

ரஷ்ய நாட்டு மீனவர் ஆற்றில் மீன் பிடிக்க சென்ற போது 4000 வருடத்திற்கு முன்பு இருந்த பாகன் கடவுளின் சிலையை கண்டெடுத்துள்ளார்.
நிக்கலோ தாராசோவ் என்ற மீனவர் ரஷ்யாவின் திசூல் நகரில் உள்ள ஆற்றில் மீன் பிடித்துக்கொண்டிருந்த போது 4000 வருடத்திற்கு முன்பு இருந்த பாகன் கடவுளின் சிலையை கண்டெடுத்துள்ளார்.
இவர் கண்டுபிடித்த இந்த சிலையை தொல்பொருள் ஆய்வாளர்கள், இது அற்புதமான சிலை என்றும் மேலும் இதன் மதிப்பு தங்கத்தை போன்றது எனவும் தெரிவித்துள்ளனர்.
இந்த சிலை பெரிய கண்களுடன், பெரிய வாய் மற்றும் கோபமடைந்த முக தோற்றத்துடனும் இருந்ததாக தெரிவித்துள்ளனர்.
மேலும் 30 செ.மீ நிளமும், 5 செ.மீ அகலமும் கொண்ட இந்த சிலையை ஆய்வாளர்கள் 4000 வருடத்திற்கு முன்பு செதுக்கப்பட்டிருக்கலாம் என்றும், நாளடைவில் இது கல்லாக மாறியிருக்கலாம் எனவும் தெரிவித்துள்ளனர்.
விலை மதிப்புடையை இந்த சிலைக்கு நிக்கலோ எந்தவித பணம் வாங்காமல் விட்டு சென்றுள்ளார் என்பது குறிப்பிடதக்கது.
தற்போது இந்த சிலையானது அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment