Tuesday, May 27, 2014

தீவிரவாதிகளால் கடத்தப்பட்ட மாணவிகளின் இருப்பிடம் கண்டுபிடிப்பு - மீட்கும் பணியில் நைஜீரியா

தீவிரவாதிகளால் கடத்தப்பட்டு ஒழித்து வைத்திருக்கும் சிறுமிகளின் இருப்பிடத்தை கண்டுபிடித்துள்ளதாக நைஜீரிய பாதுகாப்பு தரப்பு தெரிவித்துள்ளது.
கடந்த மாதம் நைஜீரியாவில் போர்னோ மாகாணத்தில் சிபோக் என்ற இடத்தில், பாடசாலை மாணவிகள் 276 பேர், போகோ ஹாரம் தீவிரவாதிகள் கடத்தி சென்று மறைவிடத்தில் சிறை வைத்தனர்.

அவர்களை 'செக்ஸ்' அடிமைகளாக விற்க போவதாக மிரட்டல் விடுத்தனர். இது உலக மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. நைஜீரிய ராணுவத்தால் அவர்களை கண்டுபிடிக்க முடியவில்லை. அதை தொடர்ந்து அவர்களை மீட்க அமெரிக்கா ராணுவத்தை அனுப்பியுள்ளது. அந்நாட்டு அரசும் மாணவிகளின் இருப்பிடத்தை கண்டுபிடிக்க ராணுவத்தை அப்பணியில் ஈடுபடுத்தியது.

தற்போது மாணவிகளை தீவிரவாதிகள் எங்கு மறைத்து வைத்திருக்கிறார்கள் என்பதை ராணுவம் கண்டுபிடித்துவிட்டதாக அந்நாட்டு பாதுகாப்பு துறை தலைவரான ஏர் மார்ஷல் அலெக்ஸ் பாடேஹ் தெரிவித்துள்ளார்.
 விரைவில் மாணவிகள் மீட்கப்படுவார்கள் என அலெக்ஸ் பத்திரிக்கையாளர்களிடம் தெரிவித்தார்.

No comments:

Post a Comment