Monday, May 26, 2014

காரின் மீது ரயில் மோதி! ஓட்டிய பெண் உயிர் பிழைத்த அதிர்ச்சிகரமான காட்சிகள் !

அமெரிக்காவின் புளோரிடோ நகரில் ரயில் தண்டவாளத்தை காரில் கடக்க முயன்றபோது ஏற்பட்ட விபத்து ஒன்றில் இருந்து பெண் ஒருவர் நூலிழையில் உயிர்தப்பினார்.
இந்த சம்பவம் ரயிலில் இருந்த கேமராவினால் பதிவு செய்யப்பட்டு அந்த வீடியோ தற்போது உலகம் முழுவதும் இண்டர்நெட்டில் பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
புளோரிடோ நகரில் உள்ள Kristen Taylor, என்ற 28 வயது பெண், அங்குள்ள ரயில்வே தண்டவாளத்தை காரில் கடக்க முயன்றபோது காரின் பின்சக்கரம் ரயில் தண்டவாளத்தை கடக்க முயலாமல் சிக்கியது. அந்த நேரத்தில் மிக வேகமாக ரயில் ஒன்று வந்தது. மிக அருகில் வந்துவிட்ட ரயிலில் இருந்து தப்புவதற்காக கடைசி நொடியில் காரில் இருந்து கீழே குதித்து காரை ஓட்டி வந்த Kristen Taylor உயிர் தப்பினார்.
ரயில் மிக அதிகமான வேகத்தில் வந்ததால் காரின் மீது மோதுவதை ரயில் ஓட்டுனரால் தடுக்க முடியவில்லை. ரயில் ஓட்டுனர் ரயிலை பிரேக் போட்டு நிறுத்த முயற்சித்த போதிலும் காரின்மீது மோதுவதை அவரால் தவிர்க்க முடியவில்லை. இந்த விபத்து ரயிலின் முன்பகுதியில் உள்ள கேமராவில் பதிவாகியுள்ளது. இந்த அதிர்ச்சிகரமான வீடியோவை தற்போது பாருங்கள்.
USA_Car USA_Car-01 USA_Car-02 USA_Car-03 USA_Car-04
- See more at: http://www.canadamirror.com/canada/26630.html#sthash.0m6HZV1s.dpuf

No comments:

Post a Comment