Thursday, May 29, 2014

ஆபாச உடை அணிந்த மாணவிகளை அதிரடியாய் வெளியேற்றிய கனடிய பாடசாலை !

நியுபவுன்லாந், லப்றடோர் நகரில் உள்ள மெநிகெக் உயர்தர பாடசாலையிலிருந்து கிட்டத்தட்ட 30 மாணவர்கள் பாடசாலையின் ஆடை விதிமுறைளை மீறி கையில்லாத சட்டைகள் மற்றும் பட்டைகள் வெளியில் தெரியும் வகையில் ப்ரா அணிந்து பாடசாலைக்கு வந்தனர் என பாடசாலையில் இருந்து திருப்பி அனுப்பபட்டனர்.
இச்சம்பவம் புதன்கிழமை நடந்துள்ளது. பாடசாலையை சேர்ந்த இரு ஆண்களும் மிகுதி பெண்களுமாக 30-மாணவர்களிற்கு, அவர்கள் பாடசாலை ஆடை விதிமுறைகளை மீறினார்களென பாடசாலை அதிகாரிகளினால் தெரியபடுத்தப் பட்டனர்.
ஆண்கள் கையில்லாத மேல் சட்டையையும், பெண்கள் அவர்களது ப்ரா பட்டைகள் வெளியே  தெரிய கூடியவகையில ராங்ஸ் எனப்படும் கைகள் மற்றும் கொலர் இல்லாத அகன்ற தோள் பட்டையுடனான மேற்சட்டை அணிந்து பாடசாலைக்கு சென்றனர்.
தங்களது ப்ரா பட்டைகள் வெளியே தெரிவதால் சில ஆண் ஆசிரியர்களினதும் மாணவர்களினதும் கவனம் திசைதிருப்ப படுவதாக தெரியவந்துள்ளதால் இவ்வாறு ஆடைகள் அணிந்து பாடசாலைக்கு வருவது பொருத்தமற்றதென கூறப்பட்டதாக மாணவி ஒருவர் கூறியுள்ளார்.
திருப்பி அனுப்பபட்ட மாணவிகள் சிலரின் பெற்றோர் இதனை விரும்பவில்லை என அறியப்படுகின்றது.
பாடசாலையின் இச்செய்கை மூர்க்கதனமானதென பெற்றார் ஒருவர் தெரிவித்துள்ளார்.
பாடசாலை  மாணவர்களின் உரிமைகளை மீறும் நோக்கத்துடன் செயற்படவில்லை  என நியுபவுன்லான்ந் மற்றும் லப்றடோர் ஆங்கில பாடசாலை மாவட்டம் சிபிசி செய்தியில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
விதிமுறை சம்பந்தமான சமீபத்திய பதிப்பு 2012-மே மாதம் அமுல்படுத்தப்பட்டு பாடசாலை கவுன்சில் மற்றும் லப்றடோர் பாடசாலை மாவட்டத்தினாலும் அங்கீகரிக்கப்பட்டதாகவும் அறிக்கையில் தெரிவிக்கப் பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
பாடசாலை இணையத்தளத்தில் ஆடை விதிமுறையின் தொகுப்பு கிடைக்க கூடியதாக உள்ளதெனவும் தெரிவிக்கப் பட்டுள்ளது.
bra1
bra

- See more at: http://www.canadamirror.com/canada/26786.html#sthash.2U0BvLzG.dpuf

No comments:

Post a Comment