Friday, May 30, 2014

வடக்கில் மாணவர்களை இராணுவத்திற்கு பிடிக்கும் படலம் ஆரம்பம்…

மோடியை சந்திக்கும் லேடி

தமிழக முதல்வர் ஜெயலலிதா ஜூன் 3-ம் தேதி புது டெல்லி பயணம் மேற்கொள்கிறார். பிரதமர் நரேந்திர மோடியை அவர் சந்தித்துப் பேசுவார். பிரதமர் அலுவலகத்தில் நடக்கும் இந்தச் சந்திப்பின்போது, தமிழக அரசின் சார்பில் மனு ஒன்றை பிரதமரிடம் அவர் அளிப்பார். அதில், மத்திய அரசிடம் நிலுவையில் உள்ள தமிழகத்தின் மிக முக்கிய விவகாரங்கள் அடங்கியிருக்கும்.
தமிழகத்தின் வளர்ச்சிப் பாதையை துரிதமாக்குவதற்கு வித்திடக் கூடியதும், மாநில நலனைக் காக்கக் கூடியதுமான மத்திய அரசு அதிவேகமாக கவனம் செலுத்தக்கூடிய விவகாரங்கள் முன்வைக்கப்படும் என்று அந்தச் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
http://www.jvpnews.com/srilanka/71205.html

வடக்கில் மாணவர்களை இராணுவத்திற்கு பிடிக்கும் படலம் ஆரம்பம்…

வடக்கினில் மீண்டும் பாடசாலை மாணவர்களிற்கு இராணுவப்பயிற்சி வழங்கும் நடவடிக்கை சத்தமின்றி ஆரம்பமாகியுள்ளது. விருப்பமான மாணவர்களிற்கே இப்பயிற்சி வழங்கப்படுவதாக வடமாகாண கல்வி அமைச்சின் செயலாளர் ஊடகங்களிற்கு தெரிவித்துள்ளார். எனினும் பாடசாலை மாணவர்;களிற்கு இராணுவத்தினர் பாடசாலை நேரத்தில் பயிற்சி வழங்குவதை அவர் மறுதலித்திருக்கவில்லை.
ஏற்கனவே பல்கலைக்கழகங்களிற்கு தெரிவாகின்ற மாணவர்களிற்கு இராணுவத்தளங்களில் பயிற்சி வழங்கும் நடவடிக்கைகள் தொடர்கின்ற நிலையில் பாடசாலை அதிபர்களிற்கு கேணல் தர பட்டம் வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.Studin
http://www.jvpnews.com/srilanka/71202.html

No comments:

Post a Comment