Wednesday, May 28, 2014

ஸ்மிரிதி இராணி கவர்ச்சியானவர்: காங்கிரஸ் தலைவர் கூறிய கருத்தால் பெரும் சர்ச்சை

கல்வி மற்றும் மனித வள மேம்பாட்டுத் துறை அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ள ஸ்மிரிதி இராணி ஒரு பட்டதாரி அல்ல என்று காங்கிரஸ் தலைவர் அஜய் மக்கான் கருத்து தெரிவித்துள்ளார்.
பாஜகவைச் சேர்ந்த ஸ்மிரிதி இராணி தற்போது மத்திய அமைச்சராக பதவியேற்றுள்ளார்.
அவருக்கு கல்வி மற்றும் மனித வள மேம்பாடு ஆகிய துறைகள் ஒதுக்கப்பட்டுள்ளன.
இது குறித்து தனது ட்விட்டர் தளத்தில் காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவரான அஜய் மக்கான் கருத்து வெளியிட்டுள்ளார்.
அதில், கல்வி அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ள இராணி பட்டதாரி கிடையாது என்பது தேர்தலின் போது அவர் தாக்கல் செய்துள்ள பிரமாண பத்திரத்தில் இருந்து தெரியவந்துள்ளதாக கூறியுள்ளார்.
இதற்கு பாஜக தனது கண்டனத்தை தெரிவித்துள்ளதோடு, இராணி ஆங்கிலம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் சரளமாக பேசுவார் என்று மத்திய சட்ட அமைச்சர் ரவி சங்கர் பிரசாத் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், மக்கானின் கருத்துக்கு ஜம்மு-காஷ்மீர் முதலமைச்சரான உமர் அப்துல்லாவும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுபற்றி ட்விட்டரில் கூறிய அவர், கல்வி அமைச்சராக உள்ளவர் கற்றிருக்கவேண்டும் என்றால், விமான போக்குவரத்து துறையை கவனிப்பவர் விமானியாக இருக்கவேண்டும் என மக்கான் கூறுவாரா என கேள்வியெழுப்பியுள்ளார்.
மேலும், இராணியை பற்றி கவர்ச்சியானவர் மற்றும் மேல் தட்டு சமூகத்தை சேர்ந்தவர் என வரம்பு மீறி கருத்து பதிவு செய்துள்ள மக்கானுக்கு ட்விட்டரிலேயே பலர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment