Friday, May 30, 2014

போதை தலைக்கேறியதால் சிறுவர்களை பயமுறுத்திய கேட்

போதை தலைக்கேறியதால் இளவரசி கேட் மிடில்டன் புகைப்படத்திற்கு வித்தியாசமாக போஸ் கொடுத்துள்ளார்.
இளவரசி கேட் மிடில்டன், தனது கணவரான வில்லியம்சுடன் ஸ்காட்லாந்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார்.
எப்போதும், இளவரசி கேட் சுற்றுப்பயணம் மற்றும் பொது நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ளும் போது அழகான ஆடைகளை அணிவார். மேலும் தன்னை சந்திக்கும் மக்களிடமும் சகஜமாக பேசுவார்.
இந்நிலையில், ஸ்காட்லாந்தில் பள்ளி சிறுவர்களை சந்தித்த இவர், மூக்கு மற்றும் முகத்தை சுழித்தபடி பேசியுள்ளார்.
மேலும் புகைப்படத்திற்கு வித்தியாசமாகவும் போஸ் கொடுத்துள்ளார். சிறுவர்களை சந்திப்பதற்கு முன்னதாக நடைபெற்ற நிகழ்ச்சியில் அவர் அதிகமாக விஸ்கி குடித்ததால், போதை தலைக்கேறி இவ்வாறு நடந்துள்ளார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது.

No comments:

Post a Comment