Monday, May 26, 2014

பிரித்தானியாவில் காணாமல்போன படகு அமெரிக்காவில்: அதில் இருந்த 4ல் வரைக் காணவில்லை !



கடலில் மாயமாக பிரிட்டிஷ் படகு, அமெரிக்க கரையில் இருந்து 1000 மைல்களுக்கு அப்பால் கடலில் காணப்படுவதாக, அமெரிக்க கடலோர காவல்படை தெரிவித்துள்ளது. ஆனால், படகில் சென்ற 4 பேரும் படகில் இல்லை. அவர்கள் என்ன ஆனார்கள் என்பது குறித்த தகவல் ஏதும் இல்லை.

இந்த படகை முதலில் அமெரிக்க கடற்படையின் ரோந்து விமானம் ஒன்றே அடையாளம் கண்டது. அதையடுத்து கடலோர காவல்படைக்கு தகவல் தெரிவித்து அவர்கள் சென்று பாாத்தபோது, 39 அடி நீளமான இந்தப் படகு சேதம் ஏதுமின்றி மிதந்து கொண்டிருந்தது. பிரிட்டிஷ் கடல்பகுதியில் இருந்து காணாமல்போன படகு, அமெரிக்காவுக்கு அருகே வரை எப்படி வந்தது என்பது தெரியவில்லை.

தற்போது, படகில் இருந்து காணாமல் போன நால்வரையும் கடலில் தேடும் நடவடிக்கையில், அமெரிக்க கடற்படை ரோந்து விமானங்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. காணாமல் போனவர்கள் இதுவரை கண்டுபிடிக்கப்படாத காரணத்தால், அவர்கள் உயிருடன் இருப்பதற்கான சான்ஸ் மிகவும் ஸ்லிம் என கடலோர காவல்படை தெரிவித்துள்ளது. படகு கவிழவும் இல்லை. அந்த கடல் பகுதியில் மோசமான காலநிநையும் கடந்த இரு நாட்களாக இருக்கவில்லை என்ற நிலையில் இந்த 4 பேரும் எப்படி மாயாமானார்கள் என்ற மர்மத்துக்கு இன்னமும் விடை தெரியவில்லை.

http://www.athirvu.com/target_news.php?getnews=news&action=fullnews&showcomments=1&id=6885

No comments:

Post a Comment