Friday, April 25, 2014

பிரித்தானியாவுக்கு நாடு கடத்தப்பட்ட தாதியிடம் மன்னிப்பு கோரப்பட்டது!– நேஸிங் டைம்ஸ்!!

புத்தபெருமானின் உருவத்தை பச்சை குத்தியிருந்தமைக்காக இலங்கையில் இருந்து நாடு கடத்தப்பட்ட பிரித்தானிய பிரஜையான தாதியிடம் இலங்கை அரசாங்கம் மன்னிப்பு கோரியுள்ளது
37 வயதான பிரித்தானிய பிரஜை நயோமி கோல்மென் கடந்த 21 ஆம் திகதி இலங்கை வந்தபோது கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைதுசெய்யப்பட்டார்.
அவர் தமது கை புஜத்தில் புத்தபெருமானின் உருவத்தை பச்சை குத்தியிருந்த குற்றச்சாட்டின் பேரிலேயே கைதுசெய்யப்பட்டார்.
இதன் பின்னர் நீர்கொழும்பு சிறையில் அடைக்கப்பட்ட அவர் வெளிநாட்டவர்களுக்கான தடுப்பு நிலையத்துக்கு மாற்றப்பட்டு அங்கிருந்து சொந்த நாட்டுக்கு திருப்பியனுப்பப்பட்டார்.
இதன்போது பிரித்தானிய உயர்ஸ்தானிகரக அதிகாரிகளும் இலங்கை சுற்றுலா சபை பிரதிநிதியும் சென்றிருந்தனர்.
இதன்போது பிரித்தானிய தாதி கைதுசெய்யப்பட்டமைக்கு இலங்கையின் சார்பில் வருத்தம் வெளியிடப்பட்டது.
அத்துடன் எதிர்காலத்தில் இலவச இலங்கை சுற்றுலாவுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டதாக பிரித்தானியாவின் நேஸிங் டைம்ஸ் நெட் என்ற இணையத்தளம் தெரிவித்துள்ளது.
இதேவேளை நாடு கடத்தப்பட்ட தாதி, தாய்லாந்து, இந்தியா, கம்போடியா மற்றும் நேபாளம் ஆகிய நாடுகளில் ஏற்கனவே பௌத்த மதம் தொடர்பான பயிற்சிகளை பெற்றுக்கொண்டதாகவும், பயிற்சி பட்டறைகளில் பங்கேற்றதாகவும் நேஸிங் டைம்ஸ் நெட் இணையத்தளம் சுட்டிக்காட்டியுள்ளது
http://www.tamilwin.com/show-RUmsyERZLXfq1.html

No comments:

Post a Comment