Thursday, April 24, 2014

வேற்றுலக வாசிகளால் கடத்தப்பட்டீர்களா? இதோ ஒரு விவாத மேடை !!!

இங்கிலாந்தில் வேற்றுலக கிரகவாசிகள் பற்றி விவாதிப்பதற்காக குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.
இந்த குழுவில் வேற்றுகிரகவாசிகளை கண்டவர்கள், அதன் அனுபவங்கள் குறித்து கலந்துரையாடலாம்.
மேலும், தங்கள் அனுபவங்களை பகிர்ந்து கொள்கையில், அவர்கள் மற்றவர்கள் தங்களை கேலி செய்து விடுவார்களோ என்று பயப்படதேவையில்லை.
வேற்றுக்கிரகவாசிகளை கண்ட உண்மைச்சம்பவங்களையும், வேற்றுக்கிரக பறக்கும் தட்டு, மற்றும் விண்வெளிக்கப்பல் போன்றவற்றையும் நேருக்கு நேராகக் கண்டது பற்றி தயங்காமல் இந்த ஆதரவுக்குழுவில் பகிர்ந்து கொள்ளலாம்.
மேலும் எவ்வாறு தாங்கள், அந்நிய கிரக வாசிகளால் கவர்ந்திழுக்கப்பட்டு, கடத்திச் செல்லப்பட்டனர் என்பதை தயங்காமல் பகிர்ந்து கொள்ளலாம்.
அவர்களுக்காகவே இந்த கூட்டம் ஒரு மாநாடாக நடத்தப்படும். இந்த மாநாடு Hastings என்ற பகுதியில் கிழக்கு SUSSEX என்ற இடத்தில் இங்கிலாந்தில் நடைபெறவுள்ளது.
இந்த அமைப்பின் நிறுவனர் ஜோன் சம்மர் பத்திரிகை ஒன்றிற்கு அளித்துள்ள பேட்டியில், வேற்றுலக அந்நியவாசிகள் கடத்தல் பற்றியும் புவிக்கப்பலானவைகளுடன், தங்களது தொடர்பு குறித்தும் வேற்றுக்கிரக அந்நிய வாசிகளை சந்தித்தது குறித்தும் எவ்வித தயக்கமுமின்றி கலந்துரையாடலாம் என்று கூறியுள்ளார்.

No comments:

Post a Comment