Wednesday, April 23, 2014

மியூசியத்தில் சிறுமியின் பேய் உருவம்

இங்கிலாந்து தம்பதிகள் பழங்கால அருங்காட்சியத்தில் எடுத்த புகைப்படங்களில் சிறுமியின் பேய் உருவம் இருந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இங்கிலாந்து மேற்கு யார்க்சையர் வேக் பீல்டை சேர்ந்த ஜான் பர்ன்சைடு- ஷோனா பேக்கவுஸ் தம்பதிகள் தங்கள 18 மாத மகண் ஜான் தாடன் யார்க் நகரில் உள்ள கேஸ்டில் பழங்கால மியூசியத்திற்கு சுற்றிபார்க்க சென்றுள்ளனர்.
அங்குள்ள சில பழங்கால பொருட்கள் இருக்கும் இடத்தில் இருவரும் தனித்தனியாகவும், ஒன்றாகவும் சேர்ந்து பலவிதமான புகைப்படங்களை தங்கள் கைப்பேசியில் எடுத்துக்கொண்டனர்.
பின்னர் வீட்டிற்கு வந்த அவர்கள் மெமரி கார்டை எடுத்து அதில் எடுத்த புகைப்படங்களை பார்த்து உள்ளனர். அப்போது அவர்களுக்கு அதிர்ச்சி ஏற்பட்டு உள்ளது.
அவர்கள் எடுத்த ஓவ்வொரு புகைப்படத்திலும் ஒரு சிறுமியின் பேய் உருவம் விழுந்து உள்ளது.
அவர்கள் படம் பிடித்துள்ள அனைத்து புகைப்படங்களிலும், அந்த சிறுமியின் உருவம் கருப்பு வெள்ளையில் பதிவு ஆகியுள்ளது. இது தங்களுக்கு ஆச்சரியத்தையும், அதிர்ச்சியையும் கொடுப்பதாக தம்பதிகள் கூறியுள்ளனர்.
தற்போது அவர்கள், சிறுமியின் பேய் உருவம் பதிவு பெற்ற புகைப்படங்களை பேஸ்புக்கில் வெளியிட்டுள்ளனர். ஏராளமானோர் அந்த புகைப்படங்களை பார்த்து கமெண்ட் அளித்து வருகின்றனர்.
இதுகுறித்து மியூசிய அதிகாரி கூறும் போது, அவர்கள் எவ்வளவு எண்ணிக்கையில் படம் பிடித்தார்கள் என தெரியவில்லை. மேலும் அதில் எத்தனை படத்தில் இவர் குறிப்பிட்ட உருவம் இருக்கிறது எனவும் தெரியவில்லை.
இது போன்ற புகைப்படங்களின் உள்ளே சில உருவங்கலை கொண்டு வருவது தொடர்பான மொபைல் அப்ளிகேஷன்ஸ் அதிகரித்து வருகிறது . அதனால் அதை விளம்பரத்திற்காகவும் செய்து இருக்கலாம் என்று தெரிவித்துள்ளார்.
http://www.newsonews.com/view.php?224MM302lOU4e2BnBcb280Cdd308Mbc3nBJe43OlR0236Ay3

No comments:

Post a Comment