Friday, April 25, 2014

இந்தியாவின் தேசியப் பிரச்சினையாக உருவெடுக்கம் பலாத்காரம்: அதிர்ச்சி தகவல்!

இந்தியர்களில் பெரும்பாலானோர் பாலியல் பலாத்காரத்தையே தேசியப் பிரச்சினையாக கருதுவதாக அமெரிக்காவின் ப்யூ ஆய்வு மையம் நடத்திய ஒரு ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்தாண்டு டெல்லியில 23 வயது இளம் மருத்துவ மாணவி கொடூரமாக பாலியல் பலாத்காரத்துக்குள்ளாகி உயிரிழந்த சம்பவத்தைத் தொடர்ந்து இந்திய மக்கள் பலாத்காரத்தைத்தான் மிக முக்கியமான தேசிய பிரச்சினையாக கருதுவதாக இந்த மையம் தெரிவிக்கிறது.
இதுதொடர்பாக 2013ம் ஆண்டு டிசம்பர் 7ம் திகதி முதல் 2014, ஜனவரி 12ம் திகதி இந்தியாவில் தேசிய அளவிலான கருத்துக் கணிப்பை இந்த மையம் நடத்தியது.
அதில் பத்தில் 9 இந்தியர்கள், பலாத்காரம்தான் முக்கியமான தேசிய பிரச்சினையாக இருப்பதாக தெரிவித்துள்ளனர்.
பத்தில் எட்டு பேர் அதாது 82 சதவீதம் பேர் இது முக்கியமான பிரச்சினையாக மாறி வருவதாக குறிப்பிடடனர். நான்கில் 3 பேர், இந்தியாவில் உள்ள சட்டத் திட்டங்கள் மிகவும் நீர்த்துப் போயுள்ளதாக தெரிவித்துள்ளனர்.
78 சதவீதம் பேர் காவல்துறை சரியான முறையில் செயல்படுவதில்லை என்றும், குற்றவாளிகளிடம் அவர்கள் கடுமை காட்டுவதில்லை என்றும் குறை கூறியுள்ளனர்.
இந்த கருத்துக் கணிப்பை 18 வயதுக்கு மேற்பட்ட தமிழ், இந்தி, தெலுங்கு, ஒடியா, மராத்தி, கன்னடா, குஜராத்தி ஆகிய மொழிகளில் 2464 பேரிடம் நடத்தியுள்ளனர்.
இந்தியாவின் அதிக மக்கள் தொகை கொண்ட 17 மாநிலங்களில் 15 மாநிலங்களில் இது நடத்தப்பட்டுள்ளது. இதில் கேரளா, அஸ்ஸாம் ஆகியவை இடம் பெறவில்லை.
http://www.newindianews.com/view.php?224MM303lOe4e2DmKcb240Mdd304ybc2mDDe43Ol30236A43

No comments:

Post a Comment