Wednesday, April 23, 2014

தமிழகத்தை ஆளும் ஆங்கிலம்!!அனைவருமே அந்நியர்!!!

மோடியா இல்ல இந்த லேடியா: ஜெயலலிதா அதிரடி
[ செவ்வாய்க்கிழமை, 22 ஏப்ரல் 2014, 05:16.23 AM GMT +05:30 ]
சிறந்த நிர்வாகி குஜராத் முதல்வர் நரேந்திர மோடி அல்ல, தமிழகத்தின் இந்த லேடிதான் என்று தமிழக முதல்வர் ஜெயலலிதா கூறியுள்ளார்.
தென் சென்னை மக்களவைத் தொகுதி அதிமுக வேட்பாளரை ஆதரித்து பேசிய அவர், குஜராத்தை தமிழகத்துடன் ஒப்பிட்டு பல்வேறு துறைகளின் மனிதவளக் குறியீடுகளைப் பட்டியலிட்டு அந்த மாநிலத்தின் முதல்வர் நரேந்திர மோடியைவிடத் தானே சிறந்த நிர்வாகி என்று குறிப்பிட்டு பேசியுள்ளார்.
அவர் பேசுகையில், ஒரு மாநிலம் வளர்ச்சி பெற்றிருக்கிறதா? அந்த வளர்ச்சி ஏழை எளிய நடுத்தர மக்களை சென்றடைந்து இருக்கிறதா? என்பதை தெளிவுபடுத்துபவை தான் மனிதவளக் குறியீடுகள்.
விளம்பர வளர்ச்சி எது, உண்மையான வளர்ச்சி எது என்பதை இந்த மனிதவளக் குறியீடுகள் தான் அனைவருக்கும் தெளிவுபடுத்தும்.
தமிழகத்தின் வளர்ச்சி என்பது ஏழை எளியோர் அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சி.
வாக்காளர்களே இப்போது சொல்லுங்கள். சிறந்த நிர்வாகி யார்? குஜராத்தைச் சேர்ந்த மோடியா அல்லது தமிழகத்தைச் சேர்ந்த இந்த லேடியா?
அனைத்துத் துறைகளிலும் மிகச் சிறந்த நிர்வாகத்தை அளித்துக் கொண்டிருப்பவர் தமிழகத்தின் இந்த லேடிதான் என்பதைப் புரிந்துகொள்ளுங்கள் என்று கூறியுள்ளார்.
http://www.newindianews.com/view.php?22AOlv2bce40Me4e44MMc02aKmD3dd3RDmc30266AY2e4K04y0cb3lOKd3
அழகிரிக்கு ஸ்டாலின் கொடுத்த பதிலடி!
[ திங்கட்கிழமை, 21 ஏப்ரல் 2014, 10:58.37 AM GMT +05:30 ]
கட்சிக்கு துரோகம் செய்யாதவர்களே வேட்பாளர்களாக நிறுத்தப்பட்டுள்ளனர் என்று திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
மக்களவைத் தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர்களை ஆதரித்து மு.க.ஸ்டாலின் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளார்.
திமுகவில் இருந்து நிரந்தரமாக நீக்கப்பட்ட மு.க.அழகிரி, தான் பங்கேற்கும் நிகழ்ச்சிகளில் எல்லாம் பணம் வாங்கிக் கொண்டு தான் திமுக வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர் என்று குற்றம்சாட்டி வந்தார்.
இதற்கு பதிலடி தரும் வகையில் மதுரையில் பேசிய ஸ்டாலின், கட்சிக்கு துரோகம் செய்யாதவர்களே வேட்பாளர்களாக நிறுத்தப்பட்டுள்ளனர் என்று பதிலளித்துள்ளார்.
http://www.newindianews.com/view.php?22AOlv2bcK40Me4e44MMc02aKmD2dd3RDmc30266AY2e4K04y0cb3lOAd3
தமிழக வளர்ச்சிக்கு காரணம் லேடி அல்ல என் டாடி தான்: ஸ்டாலின் பதிலடி
[ புதன்கிழமை, 23 ஏப்ரல் 2014, 04:32.36 AM GMT +05:30 ]
தமிழகத்தின் வளர்ச்சிக்கு காரணம் இந்த லேடி அல்ல, எனது டாடி தான் என்று திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
திருச்சி மக்களவைத் தொகுதி திமுக வேட்பாளரை ஆதரித்து புதுக்கோட்டையில் தேர்தல் பிரசார நிறைவுப் பொதுக்கூட்டத்தில் பேசிய அவர், உடல் நலம் குன்றிய நிலையிலும் திமுக தலைவர் கருணாநிதியும், அவரைவிட ஒரு வயது மூத்தவரான பேராசிரியர் அன்பழகனும் பிரசாரம் செய்கின்றனர்.
மேலும், சென்னையில் பேசிய முதல்வர் ஜெயலலிதா சிறந்த நிர்வாகி மோடி இல்லை, இந்த லேடி தான் என்று கூறியுள்ளார்.
ஆனால், தமிழக வளர்ச்சிக்கும், பெருமைக்கும் காரணம் லேடி அல்ல, எனது டாடி தான்.
மோடியும், லேடியும் மக்களை ஏமாற்றும் கேடிகளாக இருப்பார்கள் எனவும் இந்தத் தேர்தலில் தமிழக மக்கள் அவர்களுக்கு சவுக்கடி கொடுப்பார்கள் என்றும் கூறியுள்ளார்.
http://www.newindianews.com/view.php?22AOlv2bcI40Me4e44MMc02aKmD3dd3RDmc30266AY2e4U04y0cb3lOUd3

No comments:

Post a Comment