Wednesday, April 30, 2014

சர்வதேச நாணய நிதிய இயக்குனராகும் வாய்ப்பு சிங்கப்பூர் தமிழருக்கு !

சர்வதேச நாணய நிதியத்தின் அடுத்த நிர்வாக இயக்குநராகும் வாய்ப்பு, சிங்கப்பூரைச் சேர்ந்த தமிழரான தர்மன் சண்முகரத்தினத்திற்கு கிடைக்கலாம் எனக் கருதப்படுகின்றது. சிங்கப்பூர் நாட்டின் நிதியமைச்சராக இருந்த தர்மன், சர்வதேச நாணய நிதியத்தின் தலைமைப் பொறுப்புக்கு நியமிக்கப்படும் வகையில் முக்கிய பதிவிக்கு மாற்றப்பட்டுள்ளார். இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு சிதிலமடைந்த சர்வதேச நாடுகளின் பணப் பரிமாறலைச் சீர்செய்ய, சர்வதேச நாணய நிதியம், 1945 இல் தொடங்கப்பட்டது. இந்த அமைப்பின் நிர்வாக இயக்குநராகத் தற்போது இருப்பவர் பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த கிறிஸ்டின் லாகார்டே.

கடந்த 2011 இல் இந்தப் பொறுப்புக்கு வந்த லாகார்டே 2016 வரை இப்பதவியில் இருப்பார். அவருக்குப் பிறகு, அந்த உயரிய பொறுப்புக்கு வருபவர் யார் என்பதற்கான தேடல் இப்போதே தொடங்கியுள்ளது. இதில் முந்திக் கொண்டுள்ள ஆசிய நாடுகளில் ஒன்றான சிங்கப்பூர் தன் நாட்டின் முன்னாள் நிதியமைச்சரான தர்மன் சண்முகரத்தினத்திற்கு அதற்கான வாய்ப்பை வழங்கியுள்ளது. சர்வதேச நாணய நிதியத்தின் நிர்வாக இயக்குநராக தர்மன் பொறுப்புக்கு வருவதற்கான தகுதி மற்றும் திறமையை வளர்த்துக் கொள்ளவும், சர்வதேச அளவில் அறியப்படும் நபராக அவரை மாற்றவும் முயன்று வருகிறது சிங்கப்பூர்.
சர்வதேச நாணய நிதியத்தின் ஓர் அங்கமான சர்வதேச ஆலோசனை கவுன்ஸிலின் பொருளாதார வளர்ச்சி சபையின் தலைவர் பொறுப்பில் தர்மனை சிங்கப்பூர் நியமித்துள்ளது. உலக நாடுகளின் மிக பிரபல தொழிலதிபர்கள் அங்கம் வகிக்கும் இந்த ஆலோசனை கவுன்ஸிலின் தலைவராக தர்மன் இருப்பார். இந்த இரண்டாண்டு காலத்தில் அவர் மேற்கொள்ளும் நடவடிக்கைகள் மூலம், சர்வதேச அளவில் புகழ்பெறுவார். அதன் பிறகு, சர்வதேச நிதியத்தின் தலைவராக இரண்டாண்டுகளுக்குப் பிறகு அவர் நியமிக்கப்பட வாய்ப்பு உள்ளது எனக் கூறப்படுகின்றது. சிங்கப்பூர் மத்திய வங்கியின் தலைமை செயல் அதிகாரியாக இருந்துள்ள தர்மன் அந்நாட்டின் கல்வி அதிகாரியாகவும் பணியாற்றியுள்ளார்.
http://www.jvpnews.com/srilanka/67511.html

No comments:

Post a Comment