Friday, April 25, 2014

பிரதமர் மன்மோகன் சிங்குக்கு சம்மன்ஸ் அனுப்பிய அமெரிக்க நீதி மன்றம்!


பிரதமர் மன்மோகன்சிங் மீது அமெரிக்காவில் வாஷிங்டன் மாவட்ட கோர்ட்டில், நியூயார்க் நகரைச் சேர்ந்த நீதி தேடும் சீக்கிய அமைப்பு (எஸ்எப்ஜே) ஒரு வழக்கு தாக்கல் செய்துள்ளது. அவர், 1990–களில் இந்திய நிதி மந்திரி பதவி வகித்தபோது பஞ்சாப் மாநிலத்தில் தீவிரவாதிகளை ஒடுக்குவதாகக்கூறி, நீதித்துறை நெறிமுறைக்கு அப்பாற்பட்டு சீக்கியர்களை கொன்று குவிப்பதற்காக பாதுகாப்பு படையினருக்கு ரொக்கப்பரிசு அளிக்க வகை செய்தார், நிதியும் தந்தார், பிரதமரான பிறகு சீக்கியர்களுக்கு எதிரான வன்முறைகளில் தொடர்புடைய காங்கிரஸ் கட்சியினரை பாதுகாத்து வந்தார் என்று அந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
இந்த வழக்கு வாஷிங்டன் மாவட்ட கோர்ட்டில் நீதிபதி ஜேம்ஸ் போஸ்பெர்க் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி, வரும் ஜூன் மாதம் 18–ந்தேதிக்குள் மன்மோகன் சிங்கிடம் வழக்குதாரர்கள் சம்மன் வழங்க வேண்டும் என்ற உத்தரவிட்டார். அப்படி சம்மனை வழங்காவிட்டால், வழக்கு தள்ளுபடி செய்யப்படும் எனவும் எச்சரித்தார்.
- See more at: http://www.canadamirror.com/canada/25127.html#sthash.rG6RfKA5.dpuf

No comments:

Post a Comment