Wednesday, April 23, 2014

சீனாவில் இறந்தவர்களின் நகரம் (வீடியோ இணைப்பு) !

சீனாவின் Beihai என்ற இடத்தில், நூற்றுக்கும் அதிகமான வில்லாக்கள் யாருமே குடிபுகாமல் காலியாக வெறிச்சோடிக் கிடக்கிறது.
இந்த ஆடம்பர மாளிகை வில்லாக்கள் காலியாக இருப்பதால், இந்த இடத்திற்கு இறந்தவர்களின் நகரம் என்று உள்ளூர் மக்கள் பெயர் சூட்டியுள்ளனர்.
இது உருவானதின் காரணம் யாதெனின், சீனாவில் பொதுமக்கள் வெளிநாடுகளில் பணத்தை முதலீடு செய்ய அனுமதி கிடையாது. ஆகவே சீன மக்கள், தாங்கள் சேமித்து வைத்த பணத்தை ரியல் எஸ்டேட்டுகளில் முதலீடு செய்கின்றனர்.
சீனாவில், ரியல் எஸ்டேட் வியாபாரம் லாபகரமாக நடைபெற்றுக் கொண்டிருப்பதைக் கருத்தில் கொண்டு பணக்கார சீன மக்கள் இந்த இறந்தவர்களின் நகரப் பகுதியில் ஆடம்பர பங்களாக்களைப் போல் தோற்றமளிக்கும் வில்லாக்களை மூன்று மில்லியன் யுவான்களை ( 2,85,900 பவுண்டுகள்) கொடுத்து விலைக்கு வாங்கி வருகின்றனர்.
அவர்களது முதலீடு பிற்காலத்தில், நல்ல லாபத்தினை அளிக்கும் என்ற நம்பிக்கையுடன், தனது வேலை செய்யும் இடங்களிலேயே வசித்து வருவதால், இந்த வில்லாக்கள் காலியாக வெறிச்சோடி பேய் வீடுகள் போல தனிமையில் காணப்படுகிறது.
மேலும், அவர்கள் வேலை செய்யும் ஸ்தலங்களிலிருந்து இந்த இறந்தவர்களின் நகரம் வெகு தொலைவில் இருப்பதால், இவர்களால் அங்கு குடிபுக முடிவதில்லை, அவர்களால் அதை வாடகைக்கு விடவும் இயலவில்லை.
மேலும் வாடகைக்கு குடியேற யாரும் வருவதில்லை, ஆயினும், ரியல் எஸ்டேட் நிபுணவர்கள் கூறுவது என்னவென்றால், இன்னும் சில வருடங்களில் மக்கள் குடிபெயர்ந்து வந்து, இந்த வில்லாக்களை அதிக விலை கொடுத்து வாங்கி குடிபுகுவார்கள் என்று தெரிவித்துள்ளனர்.
http://www.newsonews.com/view.php?224MM302lOU4e2BnBcb280Cdd308Mbc3nBJe44Ol10226AK3

No comments:

Post a Comment