Friday, April 25, 2014

ஹட்டன் பஸ் நிலையத்தில் நேர கண்காணிப்பாளர்கள் லஞ்சம் பெறுவது அம்பலம்

மத்திய மாகாண போக்குவரத்து அதிகார சபையின் கீழ் இயங்கும் ஹட்டன் தனியார் பஸ் நிலையத்தில் இருக்கும் பஸ் நேர கண்காணிப்பாளர்கள் தனியார் பஸ்களில் கப்பம் வாங்குவதனால் பஸ் உரிமையாளர்கள் பல சிரமங்களுக்குள்ளாகப்படுவதாக பஸ் உரிமையாளர்கள் தெரிவிக்கின்றனர்.

குறித்த நேர கண்காணிப்பாளர்கள் பஸ் நிலையத்தில் இருக்கும் பயணிகளை ஏற்றும் நபர் மூலமாக அட்டனிலிருந்து கொழும்புக்கு செல்லும் பஸ்களில் 500 ரூபாய் தொடக்கம் 1000 ரூபாய் வரையும் ஹட்டன் பகுதிக்குட்பட்ட பிரதேசங்களில் செல்லும் பஸ்களில் ஒரு தடவைக்கு 100 ரூபாய்யும் அனுமதி பத்திரம் இல்லாமல் கொழும்புக்கு செல்லும் வேன்களிலிருந்து 1000 ரூபாவும் தனியார் பஸ்களில் ஒரு பயணிக்கு ஆசனத்தை பெற்று கொடுப்பதற்கு 50 ரூபாவிலிருந்து 100 ருபாய் வரையும் அனுமதிபத்திரம் இல்லாமல் ஹட்டன் பகுதிகளில் செல்லும்; வேன்களில் 500 ரூபாய் வரையும் கப்பம் வாங்குவதாக தெரியவந்துள்ளது.
கப்பம் பணத்தை கொடுக்காவிட்டால் பஸ்கள் செல்ல தடைகளை ஏற்படுத்தி இவ்வாறு பஸ்களை செல்லாமல் தடுத்திருப்பதாகவும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.
ஒரு நாளைக்கு கப்பமாக கிடைக்கும் பணத்தை காரியாலயத்தில் வைத்து நேர கண்காணிப்பாளர்கள் சமமாக பணத்தை பிரித்து கொள்வார்கள் என பஸ் உரிமையாளர்கள் மேலும் தெரிவிக்கின்றனர்.
அதேபோல் ஹட்டன் பஸ் நிலையத்தில் அதிகாளவான பஸ் நேர கண்காணிப்பாளர்கள் இருப்பதாகவும் இவர்கள் தங்களின் வேலைகளில் ஈடுப்படாமல் இருப்பதாகவும் பஸ் நிலைய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இன்று பஸ் போக்குவரத்தை பல சிரமங்களுக்கு மத்தியில் நடத்திசெல்லும் பஸ் உரிமையாளர்கள் ஒரு மாதத்திற்கு பெருந்தொகையான பணத்தை கப்பமாக கொடுப்பதனால் பொருளாதார ரீதியில் சிரமப்படுவதாக அவர்கள் தெரிவிக்கின்றனர்.Karin-BusKarin-Bus01Karin-Bus02Karin-Bus03Karin-Bus04Karin-Bus05Karin-Bus06Karin-Bus07Karin-Bus08

No comments:

Post a Comment