Wednesday, April 23, 2014

பிளேனுக்குள் சிக்கன் பொரிக்கப்படும் வாசம் வருகிறது- பதற்றம் ஏற்பட்டது !



செவ்வாய்கிழமை காடிஃப் நகரில் இருந்து பயணிகளை ஏற்றிக்கொண்டு ஈஜிப்ட் நோக்கிச்சென்ற விமானத்தில் உள்ள பயணிகள், சிக்கன் பொரிக்கும் வாசனை வருவதாக கூறியதை அடுத்து, குறித்த அந்த விமானத்தை அவரசமாக லண்டன் கட்விக் விமான நிலையத்தில் தரையிறக்கினார் விமானி. அட விமானத்தில் உள்ள யாரோ சிக்கனை கொண்டு வந்து , மசாலாவை தடவி எண்ணையில் பொரித்திருப்பார்கள் என்று அனாவசியமாக கற்பனை செய்யவேண்டாம். இது வேறமாதிரியான விடையம் ! நடந்ததை கேட்டால் கொஞ்சம் அச்சம் தான் வரும்.

"தாம்சன்" விமான டிக்கெட் கம்பெனி என்றால் தெரியாதவர்கள் இருக்க முடியாது. அதன் விமானம் ஒன்று காடிஃப் நகரில் இருந்து, எகிப்த்து நோக்கிப் பறந்துகொண்டு இருந்தவேளை, விமானத்தின் காத்தாடிக்குள் "சீகிள்" (ஒருவகையான பாரிய பறவை) சிக்கிக்கொண்டு விட்டது. மிகவும் உயரமாகப் பறக்கும் இந்த வகையான பறவைகள் சிலவேளைகளில் எதிர்பாராமல் இவ்வாறு விமானத்தின் காத்தாடிக்குள் சிக்கிக்கொள்வது உண்டு. அவ்வாறு அவை சிக்கிக்கொண்டால் விமானத்தின் எஞ்சினுக்குள் சென்று கருகிவிடும். இதனால் சிலவேளை விமானம் தீ பற்றவும் கூடும். இது மிகவும் ஆபாத்தான விடையமும் கூட. இதன் காரணமாகவே விமானத்திற்குள் இருந்தவர்களுக்கு சிக்கன் பொரிக்கப்படும் வாசனை வந்துள்ளது. இதில் வேடிக்கையான விடையம் என்ன தெரியுமா ?

ஒரு பயணி தனக்கு சிக்கன் பொரியல் கிடைக்குமா ? நல்ல வாசனை வருகிறதே என்று விமானப் பணிப் பெண்ணிடம் கேட்டுள்ளார். அப்போது தான் ஓடி முழித்த அந்த விமானப் பணிப்பெண் தனது மேல் அதிகாரிக்கு தெரிவிக்க, அவர் விமானிக்கு விடையத்தை சொல்ல, பதறியடித்த விமானி அப்படியே விமானத்தை திருப்பி லண்டன் கட்விக் விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்கியுள்ளார். இதேவேளை விமானம் சிலவேளை தீ பற்றலாம் என்பதற்கான தரையில் தீ அணைக்கும் படையினர் தயாராகவும் இருந்துள்ளார்கள். ஆனால் அந்த தொம்சன் விமானத்தில் பயணித்தவர்கள் அதிஷ்டசாலிகள் தான். பாதுகாப்பாக தரையிறங்கிவிட்டார்கள். பழுது பார்க்கப்பட்ட அந்த விமானம் மீண்டும் பறப்பில் ஈடுபட்டு எகிப்த்துக்கு சென்றுள்ளது.

No comments:

Post a Comment