Sunday, April 27, 2014

சீனாவில் நூறு நாய்குட்டிகளை உயிருடன் புதைத்த கொடூரம்: விசாரணைக்கு உத்தரவு



சீனாவில் நூறு நாய்குட்டிகளை உயிருடன் புதைத்த கொடூரம்: விசாரணைக்கு உத்தரவு
பீஜிங், ஏப். 27-

சீனாவில் வழி தவறி வந்த 100 நாய்களை அந்நாட்டின் அரசு அதிகாரிகள் உயிருடன் புதைத்த கொடூரமான தகவல் வெளியாகியுள்ளது. இதில் சில நாய்குட்டிகளும் அடக்கம் என அங்குள்ள விலங்கியல் ஆர்வலர்கள் கூறியுள்ளனர்.

அங்குள்ள தன்னாட்சி பிரதேசத்தில் அடங்கிய உட்புற மங்கோலியாவை சேர்ந்த அசுய்க்கி என்ற இடத்தில் மணல் அள்ளும் இயந்திரத்தை கொண்டு தோண்டப்பட்ட 20 அடி ஆழமுள்ள பள்ளத்தில் இந்த நாய்க்குட்டிகள் தூக்கி வீசப்பட்டுள்ளன. இந்த நாய்க்குட்டிகளின் அலறல் சத்தம் கேட்ட அப்பகுதி பொதுமக்கள் உடனடியாக விலங்கியல் ஆர்வலருக்கு தகவல் தெரிவத்தனர்.

அவர்கள் விரைந்து வந்து நாய்க்குட்டிகள் புதைக்கப்பட்டிருந்த இடத்தை தோண்டிய போது அதில் உயிரற்ற நிலையில் ஆறு நாய்கள் கிடந்தன. மீதமுள்ள நாய்களை அதிகாரிகள் வேறு இடங்களுக்கு எடுத்து சென்றிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. அந்நாட்டு அதிகாரிகளின் இந்த மனித நேயமற்ற நடவடிக்கைக்கும் பலரும் கண்டனம் தெரிவித்துள்ளனர். எனினும் இந்த ஆபத்தில் இருந்து ஒரு பெண் நாய்க்குட்டியும், 3 ஆண் நாய்க்குட்டிகளும் தப்பித்திருத்திருப்பது விலங்கியல் ஆர்வலர்களுக்கு சற்று ஆறுதலாக அமைந்துள்ளது

No comments:

Post a Comment