Thursday, April 24, 2014

இன்று காலை பிரித்தானியாவை உளவுபார்க வந்த ரஷ்ய விமானம்: துரத்தியது போர் விமானம் !



இன்று காலை ஐக்கிய பிரித்தானியாவின், அயல் மாநிலமான ஸ்காட்லானுக்கு அருகில், ரஷ்ய விமானம் ஒன்று பறப்பது அவதானிக்கப்பட்டுள்ளது. பிரித்தானிய பாதுகாப்பு அமைச்சு அது ரஷ்யாவின் இராணுவ ஸ்பை விமானம் என்பதனை உடனே கண்டுபிடித்துள்ளது. குறித்த ரஷ்ய விமானத்தில் இருந்து, பிரித்தானியாவை வேவுபார்க முடியும் என்ற தகவல் கிட்டியதும், உடனடியாக பிரித்தானிய வான்படையின் டைஃவூன் ரக போர் விமானங்கள் இரண்டு அப்பகுதிக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. குறித்த இந்த இரண்டு போர் விமானங்களும் தம்மை நோக்கி வருவதை அவதானித்த அந்த ரஷ்ய விமானம் , ஸ்காட்லான் பகுதில் இருந்து விலகி சர்வதேச வான் பரப்புக்குள் நுளைந்துவிட்டது. 

இதனால் பிரித்தானிய போர்விமானங்களின் தாக்குதலில் இருந்து அது தப்பிவிட்டது. பறப்பில் ஈடுபட்ட அந்த வேவு விமானம் "டொப்-வோல் 95எஸ்" ரகத்தைச் சேர்ந்தது என்றும், அது நீண்ட தூரம் பறப்பில் ஈடுபட்டு வேவுப்பணிகளில் ஈடுபடவல்லது என்றும் பிரித்தானியா தெரிவித்துள்ளது. இது ரஷ்ய தயாரிப்பு விமானம் என்றும் மேலும் அறியப்படுகிறது. பிற நாட்டு வேவு விமானங்கள் பிரித்தானிய வான் எல்லைக்குள் வருவது இதுதான் முதல்தடவை அல்ல எனத் தெரிவித்துள்ள பாதுகாப்பு அமைச்சகம், கடந்த ஆண்டில் இதுபோல சுமார் 8 சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதாக குறிப்பிட்டுள்ளது. வழமையாக இவ்வாறு ஒரு நிலை தோன்றும்போது, என் நேரத்திலும் தயாராக உள்ள தமது வான்படையைய தாம் ஏவுவதாக அது மேலும் தெரிவித்துள்ளது.

ரஷ்யா சமீபத்தில் உக்கிரேன் நாட்டில் உள்ள கிரைமியா என்னும் மாநிலத்தை கைப்பற்றியுள்ளது. இதேவேளை பிரித்தானியாவும் அமெரிக்காவும் இணைந்து உக்கிரேன் நாட்டிற்கு உதவிவருகிறது. இதுதொடர்பான கடல் போக்குவரத்து மற்றும் விமான போக்குவரத்தை பிரித்தானியா ஸ்காட்லான் ஊடாகவே செய்துவருகிறது. எனவே இப் பரப்பை ஆரயவே இந்த ரஷ்ய விமானங்கள் அங்கே வந்திருக்கலாம் என்று நம்பப்படுகிறது.


http://www.athirvu.com/target_news.php?getnews=news&action=fullnews&showcomments=1&id=6736

No comments:

Post a Comment