Wednesday, April 30, 2014

சிரஞ்சீவி போய் வரிசையில் நில்லுங்க: மக்கள் போட்ட ஆர்டர் (வீடியோ இணைப்பு)

மக்களவைத் தேர்தல் வாக்குப் பதிவின் போது சிரஞ்சீவி வரிசையில் நிற்காமல் வாக்களிக்க முயன்றபோது பொதுமக்களே அவரை தடுத்து நிறுத்தி வரிசையில் நிற்க வைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மக்களவைத் தேர்தலில் 7வது கட்ட வாக்குப் பதிவு நாடு முழுவதும் நடைபெற்று வருகிறது.
ஹைதராபாத்தில் மத்திய அமைச்சர் சிரஞ்சீவி வாக்களிக்கப்பதற்காக வாக்குச் சாவடிக்கு சென்றபோது, வரிசையில் நிற்காமல் நேராக வாக்குச் சாவடிக்குள் செல்ல முயன்றுள்ளார்.
அப்போது வரிசையில் நின்றிருந்த வாக்காளர் ஒருவர் சிரஞ்சீவையை தடுத்து நிறுத்தியதுடன், உங்களுக்கு மட்டும் என்ன சிறப்பு சலுகை? நாங்கள் எல்லாம் வரிசையில் நிற்கவில்லையா? நீங்களும் போய் வரிசையில் நின்று வாக்களியுங்கள் என்று கூறியுள்ளார்.
இதனால் அங்கு சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்டதுடன், அங்கிருந்த வாக்காளர்களும் கூச்சலிடவே வேறுவழி இல்லாமல் வரிசையில் நின்று வாக்களித்துள்ளார் சிரஞ்சீவி.
சிரஞ்சீவியை துணிச்சலுடன் தடுத்து நிறுத்திய வாக்காளருக்கு பொதுமக்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், வாக்களித்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சிரஞ்சீவி, வாக்குச்சாவடியில் எந்த ஒரு விதிமுறைகளையும் நான் மீறவில்லை.
மேலும், வாக்காளர் பட்டியலில் என் பெயரை சரிபார்க்கத்தான் சென்றேன் என்றும், ஊடகங்கள் தான் பரபரப்புக்காக இதுபோன்ற செய்திகள் வெளியிடுகின்றன எனவும் கூறியுள்ளார்.

No comments:

Post a Comment