Saturday, April 26, 2014

அமெரிக்காவும் வேறு 7 நாடுகளும் றுஸ்யாமேல் மேலதிக தடைகளுக்குத் தீர்மானம் !


அமெரிக்காவும் அதனுடன் இணைந்து G7 என அழைக்கப்படுகின்ற அமைப்பும் இணைந்து றுஸ்யாமேல் மேலதிகமான தடைகளை விதிப்பதற்கு இணக்கம் கண்டுள்ளன எனத் தகவல்கள் தெரிவித்திருக்கின்றன. இவ்வாறான தடைகள் றுஸ்யாமீது விதிப்பதற்கான காரணம் றுஸ்யா உக்கிரைன் நாட்டின்மீது ஆக்கிரமிப்பு நடவடிக்கையை மேற்கொண்டமையே எனத் தெரிகிறது.
இவ்வாறாக G-7 என அழைக்கப்படுகின்ற அமைப்பில்அங்கம் வகிக்கும் நாடுகள் யாவும் இணைந்து வெள்ளிக்கிழமை இரவு அறிக்கையொன்று வெளியிட்டிருப்பதாக வெள்ளை மாளிகை தெரிவித்திருக்கின்றது. அந்த அறிக்கையில் அவர்கள் மிகவும் விரைவில் தடைகள் கொண்டுவரப்படும் எனவும் அந்தத் தடைகள் பாரிய தாக்கத்தை ஏற்படுத்த வல்லன எனவும் தெரிவித்திருப்பதுடன் றுஸ்யா மேலதிகமான ஆக்கிரமிப்பு நடவடிகை;கைகளை மேற்கொண்டால் அந்த G-7 அங்கத்துவ நாடுகள் தொடர்ந்து தடைகளை விரிவடையச் செய்வார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டிருப்பதாத் தெரியவருகிறது.
g7
G-7 அங்கத்துவ நாடுகள தாம் பொருளாதார ரீதியான தடைகளைக் கொண்டுவரவிருப்பதாகவும் அதற்கான காரணம் உக்கிரைனில் அடுத்த மாதம் வரவிருக்கின்ற தலைமைத்துவத்திற்கான தேர்தலின்போது பாதுகாப்பு சம்பந்தமான திட்டங்களுக்கு அவசியம் இருக்கின்றது எனவும் தெரிவிக்திருக்கின்றார்கள்.
வெள்ளை மாளிகை பிந்தி வெளியிட்ட தகவல்களின்படி குறிப்பிட்ட தடைகள் பெரும்பாலும் றுஸ்யாவின் பொருளாதாரத்தையே குறியாக வைத்து மேற்கொள்ளப்படுகின்றன எனவும் அவைகள் யாவும் திங்கட்கிழமை நடைமுறைக்கு வரவிருக்கின்றன எனவும் தெரிவித்திருக்கின்றது.
ஒபாமா நிர்வாகத்தின் மூத்த அதிகாரியொருவரின் கருத்துப்படி குறிப்பிட்ட அமைப்பின் அங்கத்துவ நாடுகள்யாவும் தத்தமது தடைகளையும் றுஸ்யாமீது விதிப்பதற்கு இருக்கின்றன எனவும் அந்தத் தடைகள் யாவும் ஒரேமாதிரியாக இருக்க வேண்டும் என்ற அவசியமில்iயெனவும் தெரிவித்திருக்கின்றார்.
அத்துடன் உக்கிரைனிற்குச் சொந்தமான ஆகாய எல்லைக்குள் றுஸ்யாவினது போர் விமானங்கள் குறிப்பிட்ட 24 மணித்தியாலங்களுக்குள் பல தடவைகள் பறந்திருக்கின்றன எனவும் இது றுஸ்யாவினது அத்துமீறிய ஆக்கிரமிப்புச் செயலெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- See more at: http://www.canadamirror.com/canada/25154.html#sthash.mefRSU9I.dpuf

No comments:

Post a Comment