Wednesday, April 30, 2014

மது போதையில் இருந்த 4 மாணவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளார்கள் !

இலங்கை பாராளுமன்றில் மில்லியன் கணக்கில் பணத்தை கொள்ளையடித்த நபர் !
30 April, 2014 by admin
இலங்கை பாராளுமன்றில் வேலைபார்த்த அதிகாரி ஒருவர், மில்லியன் கணக்கில் பணத்தை சுருட்டிக்கொண்டு நாட்டை விட்டு தப்பியோடியுள்ளார். புஷ்பகுமார தர்மதாச என்னும் இன் நபர் பாராளுமன்றத்தை நிர்வகிக்கும் குழுவின் பொருளாளராக இருந்துள்ளார். இவர் மேலும் ஒரு அதிகாரியுன் இணைந்து பெருந்தொகைப் பணத்தை கயாடல் செய்துள்ளார். இதேவேளை கடந்த வருடம் செப்டெம்பர் மாதம் இக் குழு புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்டது. இதனையடுத்து இக் குழுவில் உள்ள புதிய பொருளாளர், ஆவணங்களை பார்வையிட்டவேளை பெரும் கையாடல் நடந்துள்ளதை கண்டுபிடுத்துள்ளார். ஆனால் புஷ்பகுமார நாட்டை விட்டு தப்பியோடிவிட்டார். பணத்தை கையளிக்குமாறு தொடர்ந்து கோரிக்கை விடுக்கப்பட்டு வந்தது.

இன் நிலையில் புஷ்பகுமாரவுகு எதிராக இலங்கை பொலிசார் இன்ரர் போல் பொலிசாரின் உதவியை நாடியுள்ளார்கள் என்று மேலும் அறியப்படுகிறது. புஷ்பகுமாரவை கைதுசெய்து தருமாறு சர்வதேச பொலிசாரிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதனை சர்வதேச பொலிசார் ஏற்றுக்கொண்டுள்ளார்கள்.
http://www.athirvu.com/target_news.php?getnews=news&action=fullnews&showcomments=1&id=6760
மது போதையில் இருந்த 4 மாணவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளார்கள் !
30 April, 2014 by admin
பதுளை ஓயா ஆற்றுக்கருகாமையில் மது அருந்திக் கொண்டிருந்த நான்கு மாணவர்களை பதுளை பொலிஸார் கைது செய்துள்ளனர். பதுளையிலுள்ள பிரபல பாடசாலையொன்றின் உயர்வகுப்பு மாணவர்களே நேற்று திங்கட்கிழமை இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். 

குறித்த மாணவர்கள் மேலதிக வகுப்புகளுக்காக பதுளை நகருக்கு வந்து பதுளை ஓயா ஆற்றிற்கருகாமையில் மது அருந்திக் கொண்டிருப்பதாக பதுளை பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலொன்றினையடுத்து ஸ்தலத்திற்கு விரைந்த பொலிஸார் இம் மாணவர்களை கைது செய்துள்ளனர். 

இம் மாணவர்கள் நீண்ட காலமாகவிருந்தே தத்தமது பெற்றோரிடம் பொய் கூறி மேலதிக வகுப்புகளுக்கென்று பதுளை ஓயா ஆற்றங்கரைக்கு வந்து, மது அருந்துவதாக ஆரம்ப விசாரணைகளில் இருந்து தெரிய வந்ததாக பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.
http://www.athirvu.com/target_news.php?getnews=news&action=fullnews&showcomments=1&id=6761

No comments:

Post a Comment