Friday, March 21, 2014

உலக சாதனை படைத்தது நெதர்லாந்து [

டுவென்டி-20 உலக கிண்ணத் தொடரின் தகுதிச் சுற்று ஆட்டத்தில் அயர்லாந்து அணியை நெதர்லாந்து அணி அதிரடியாக வீழ்த்து சூப்பர்-10 சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது.
வங்கதேசத்தில் ஐந்தாவது ஐசிசி உலக கிண்ண டுவென்டி-20 போட்டிகள் நடந்து வருகிறது.
இப்போட்டியின் இன்றைய தகுதிச் சுற்று ஆட்டத்தில் நெதர்லாந்து- அயர்லாந்து அணிகள் மோதின.
நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் அயர்லாந்து அணி அதிரடியாக ஆடி 4 விக்கெட் இழப்பிற்கு 189 ஓட்டங்கள் எடுத்தது.
இந்நிலையில்(நெட் ரன்ரேட் படி) 14.2 ஓவரில் 190 ஓட்டங்கள் எடுத்து வெற்றி பெற்றால் சூப்பர் 10 சுற்றுக்கு தகுதி பெற்றுவிடலாம் என களமிறங்கிய நெதர்லாந்து அணி விஸ்வரூபம் எடுத்தது.
அந்த அணி 13.5 ஓவரில் 4 விக்கெட் இழப்பிற்கு 193 ஓட்டங்கள் எடுத்து வெற்றி பெற்றது, இதனையடுத்து சூப்பர் 10 சுற்றுக்கு நெதர்லாந்து தகுதி பெற்றுவிட்டது.
நெதர்லாந்தின் இந்த வெற்றியின் மூலம் அயர்லாந்து மற்றும் ஜிம்பாப்வே அணிகள் சூப்பர் 10 சுற்றுக்கு தகுதி பெறும் வாய்ப்பை இழந்துவிட்டது.
மற்றொரு அம்சமாக சர்வதேச டி20 அதிக சிக்ஸர்களை(19 சிக்ஸர்கள்) அடித்து நெதர்லாந்து உலக சாதனை படைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment