Wednesday, March 26, 2014

யாழ் மத்திய கல்லூரியில் நாடகத்துறை மானவர்களைச் சந்தித்த யாழ்.தாவடியை பிறப்பிடாகக் கொண்ட தென்னிந்திய நடிகர் ஜெய் ஆகாஷ்

தென்னிந்திய திரைப்பட நடிகர் ஜெய் ஆகாஷ் யாழ்ப்பாணம் மத்திய கல்லூரிக்கு 24.03.2014 திங்கட்கிழமை வருகை தந்திருந்தார். கல்லூரி நிர்வாகத்தின் அழைப்பின் பேரில் வருகை தந்த தென்னிந்திய திரைப்பட நடிகர் கல்லூரின் பிரதி அதிபர் பி.பாலபவன் உப அதிபர் எம்மரியதாஸ் கல்லூரியின் தமிழ்ச்சங்கபொறுப்பாசிரியர் நாக.தமிழேந்திரன் நாடக மன்ற சிரேஸ்ட பொறுப்பாசிரியர் எஸ்.ரி.குமரன் கலைமாணவர் மன்றப் பொறுப்பாசிரியர் சி.தங்கரூபன் ஆகியோருடன் கலந்துரையாடலை மேற்கொண்டதுடன் கல்லூரியின் நாடகத்துறை மாணவர்களையும் சந்தித்து நாடகத்துறையின் இன்றை கால செயற்பாடுகள் தொடர்பாகவும் கலந்துரையாடினார்.


இந்நிகழ்வுகளுக்கான ஏற்பாடுகளினை கல்லூரியின் இந்து மன்றப்பொறுப்பாசிரியர் பி.பிருந்தாபன் மேற்கொண்டிருந்தார்.

நடிகர் ஜெய் ஆகாஷ் யாழ்ப்பாணத்தின் தாவடி மண்ணைப் பிறப்பிடாகக் கொண்டவர் என்பதுடன் இந்நியாவின் தமிழ் தெலுங்கு மளையாளம் போன்ற மொழிகளில் கதாநாயகனாக புகழ்பெற்ற நடிகர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

றோஜாவனம், ராஜகோட்டம், திறிறோசஸ், ராமகிருஷ்ணா, கிச்சா, வயசு பதினாறு, அடடா என்ன அழகு, ஆயுதப்போராட்டம், ஒதிகை, ஆனந்தம், ஆரம்பம், ஆகிய தமிழ்த்திரைப்படங்களில் நடித்துள்ளார்.

சினி எக்ஸ்பிரஸ் அவாட் சிறந்த நடிகருக்காகவும், வஸ்மி பிலிம் அவாட் சிறந்த புதுமுக நடிகருக்காவும், என்.ரி.ஆர் பிலிம் அவாட் சிறந்த நடிகருக்காவும், ஆந்திரா சினி அவாட் சிறந்த நடிகருக்காவும், சந்தோசம் அவாட் சிறந்த துணை நடிகருக்காகவும், நந்தி அவாட் சிறந்த குணச்சித்திர நடிகருக்காவும் விருதுகளினை பெற்றுக் கொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.
25 Mar 2014
http://www.lankaroad.net/index.php?subaction=showfull&id=1395754804&archive=&start_from=&ucat=1&

No comments:

Post a Comment