Monday, March 10, 2014

நீயா நானா !!

நேற்றைய தினம் திரு.கோபிநாத் அவர்கள் தொகுத்து வழங்கும் நீயா நானா நிகழ்ச்சியை முழுமையாகப் பார்த்தேன். மிகவும் அருமையாக இருந்தது. காரணம் திரு.கோபிநாத் அவர்கள் அல்ல . அதில் பங்கு பற்றிய ஒரு சிலரின் வாதங்கள் தெளிவாகவும்  விளக்கமாகவும்  இருந்தன . பார்ப்பதற்கு சாந்தமாக இருந்த இரு பெண்கள் பேசத்தொடங்கியதும் சரவெடியாக வெடித்துத் தள்ளினர். நிச்சயமாக அந்த இரு பெண்களுக்கும் பரிசு கொடுத்திருக்க வேண்டும். ஆனால் அதில் ஒருவருக்கு மட்டும் பரிசைக் கொடுத்து விட்டு மற்றப் பரிசை பெரியாரை பின்பற்றும் ஒருவருக்குக் கொடுத்தது மிகவும் வேதனையளித்தது. அதுவும் அவருக்கு  தன் நிலைப்பாட்டை பூரணமாக பூர்த்தி செய்ய முடியவில்லை  , அவர் வேண்டுமென்றால் 2 புத்தகங்கள் எழுதியிருக்கலாம் ஆனால் இந்த மேடையைப் பொறுத்து தான் பரிசளிக்கிறார்கள் என்பதை நிர்வாகம் மறந்து விட்டது 


ஒரு மேடையிலோ இல்லை பொது அரங்கிலோ இலகுவாக பிரபலம் அடைய வேண்டுமென்றால் முன்னம் பிரபலமடைந்த ஒருவரை  பின் பற்றுவது போல் பேசினாலே போதும் பெரும்பாலும் . இதில் என்ன விசித்திரம் என்றால் தனித்துவம் என்ற தலைப்பில் இருக்கும் ஒருவர் இன்னொருவரின் பின்பற்றலாக நிச்சயம் இருக்க முடியாது . வேண்டுமென்றால் அவரின் கருத்துக்களோ அனுபவமோ கவர்ந்திருக்கலாம் ஆனால் அது எமது பார்வையில் எமது பாதையில்(எங்கள் எண்ணோட்டத்தில் ,கோணத்தில் ) பார்க்கப்பட வேண்டும் . அப்போது தான் அங்கு தனித்துவம் இருக்கும்.

பாதிக்கப்பட்ட ஒரு பெண் பேசும் போது நான் கூறிய அந்த இரு பெண்களும் அதை அங்கீகரித்து வரவேற்றனர் அவ்வேளையில் திரு.கோபிநாத் அவர்கள் அவர்களிடம் கேள்வியைத் தொடுத்தார் . வேறு எண்ண ஓட்டத்தில் இருக்கும் உங்களால் எப்படி இதை ஏற்றுக் கொள்ள முடிகிறது என்பதை , காரணம் அவர்களால் பிறரின் உணர்வுகளுக்கு மதிப்புக் கொடுக்கத் தெரிந்திருக்கிறது.

மேலும் நிகழ்ச்சி ஆரம்பத்தில் பொருளாதாரத்தை பற்றி பேச வந்திருக்கிறோம் என்று ஆரம்பித்து எத்தனை பேர் அதற்குத் தயாராக இருக்கின்றனர் என்ற முடிவை எடுக்கத் தயாரானார் அவர் , அது ஒரு தவறான எண்ணம் ஏனென்றால் ஒரு குழப்பமான சூழலில் quick decision making  என்பது எதிர்பார்க்க முடியாததொன்று. பெண்ணியம் என்ற பார்வையில் பார்க்கப் போனால் திரு.கோபிநாத் அவர்கள்  பெண்களை மட்டம் தட்டி விட்டார் அந்த இடத்தில் என்றும் பார்க்கலாம் அல்லவா ?

எப்படி இருந்தாலும் நேற்றைய நிகழ்ச்சி ஒரு நல்ல ஆரோக்கியமான விவாதத்தை எமக்களித்தது என்பது பாராட்டப்படக் கூடியவை

ஒருவரை தவறாக கூற வேண்டுமென்றால் இலகுவாகக் கூறி விடலாம் ஆனால் அது அழகல்ல ஏனென்றால் என்னிடம் பல குறைகள் இருக்கின்றன . அதை நானறிவேன் அப்படி இருக்கையில் மற்றவர்களின் குறைகளை பார்ப்பதற்கு எனக்கு நேரமில்லை . ஆனால் சில சந்தர்ப்பங்களில் அதைப் பற்றிக் கதைக்கத் தோன்றுகிறது . திரு.கோபிநாத் போன்றோரிடம் இன்னும் அதிகம் எதிர்பார்ப்பதாலோ இக் குறைகளை சுட்டிக் காட்ட வேண்டும் என்ற எண்ணம் எழுந்ததோ தெரியவில்லை. என் கருத்தில் தவறிருந்தால் மன்னிக்கவும்

சிவப்பு மற்றும் sky blue நிற ஆடை அணிந்த இரு பெண்கள் சிறப்பாகப் பேசினர்  ( பெயர் தெரியாததால் ஆடை நிறத்தை சொல்ல வேண்டி உள்ளது இதற்கு மன்னிக்க)

http://www.tubetamil.com/tamil-tv-shows/vijay-tv-shows/neeya-naana/neeya-naana-09-03-2014-vijay-tv.html

No comments:

Post a Comment