Sunday, March 9, 2014

லங்காசிறி வானொலியின் 4வது பிறந்த நாளும், லங்காசிறியின் தொலைக்காட்சி சேவை ஆரம்பமும்!!



லங்காசிறியின் நேயர்கள் அனைவருக்கும் வணக்கத்தை தெரிவித்துக் கொள்வதோடு லங்காசிறி வானொலி 4வது பிறந்தநாளைக் கொண்டாடிக் கொண்டிருக்கும் இவ்வேளையில் இன்று லங்காசிறி தொலைக்காட்சி சேவையினையும் அறிமுகப்படுத்துகின்றது.
பல ஆயிரக்கணக்கான உலகத் தமிழர்களின் இதயத் துடிப்பாகத் திகழும் லங்காசிறி வானொலி, வெற்றிகரமாக இன்று தனது 4-வது பிறந்த நாளைக் கொண்டாடும் வேளையில் 5ம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது.
சகல மொழிகளிலும் இயங்கும் 51692 உலக இணைய வானொலிகளுள் 4-வது இடத்தைப் பெற்றுள்ளதுடன், தமிழ் இணைய வானொலிகளின் பட்டியலில் முதல் இடத்தைப் பிடித்து லங்காசிறி முன்னிலை வகித்துக்கொண்டிருக்கின்றது.
பல தேசங்களில் சொந்தங்களைப் பிரிந்து வாழும் தமிழ் மக்களின் ஆறுதலாகவும், இணைப்புப் பாலமாகவும் திகழ்வதுடன், நடுநிலையாக செயல்படும் லங்காசிறி வானொலிக்கு மகிழ்வுடன் பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறோம்.
மேலும் லங்காசிறி தொலைக்காட்சி சேவையையும் இன்று அறிமுகப்படுத்துவதோடு, மிகவிரைவில் மக்களின் பார்வைக்காக வெளியிடப்படும் என்பதனையும் லங்காசிறி தொலைக்காட்சி பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
லங்காசிறியோடு இணைந்திருந்து லங்காசிறி வானொலி சேவையை 24 மணிநேரமும் கேட்டு மகிழ்வதுடன் லங்காசிறி தொலைக்காட்சியில் நிகழ்ச்சிகளை பார்த்து மகிழ காத்திருங்கள். வெகுவிரைவில் உங்கள் இல்லம்தேடி லங்காசிறி தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் வரவிருக்கின்றது.
கீழுள்ள இணைப்புக்களை அழுத்துவதன் மூலம் நீங்கள் லங்காசிறி வானொலியின் பிறந்தநாள் சிறப்பு நிகழ்ச்சிகளைக் கேட்கலாம்.


http://news.lankasri.com/show-RUmsyDTdLVis4.html

No comments:

Post a Comment