Tuesday, March 25, 2014

நெதர்லாந்து அணியை 39 ஓட்டங்களுக்குள் வீழ்த்திய இலங்கை!!

உலக சாதனை படைத்தது இலங்கை அணி

உலகக் கிண்ண இருபதுக்கு 20 தொடரில் நெதர்லாந்து அணிக்கெதிராக போட்டியில் இலங்கை அணி 09 விக்கெட்டுகளால் அபார வெற்றியீட்டியுள்ளது.
சிட்டகொங்கில் நடைபெற்ற இந்தப் போட்டியில் 40 ஓட்டங்கள் என்ற வெற்றியிலக்கை நோக்கி பதிலளித்தாடிய இலங்கை அணி, 05 ஓவர்களில் ஒரு விக்கெடடை மாத்திரம் இழந்து வெற்றியிலக்கை கடந்தது.
முதலில் துடுப்பெடுத்தாட அழைக்கப்பட்ட நெதர்லாந்து அணி, 10.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து, 39 ஓட்டங்களை மாத்திரமே பெற்றுக்கொண்டது.
நெதர்லாந்து அணி சார்பாக டொம் கூப்பர் மாத்திரமே 16 ஓட்டங்களைப் பெற்றதுடன், 5 வீரர்கள் ஓட்டங்கள் எதனையும் பெறாது ஆட்டமிழந்தனர்.
இலங்கை அணி சார்பாக அஞ்சலோ மெத்யூஸ் மற்றும் அஜந்த மெண்டிஸ் ஆகியோர் தலா 03 விக்கெட்களையும், லசித் மாலிங்க 02 விக்கெட்களையும் வீழ்த்தினர்.
போட்டியின் ஆட்டநாயகனாக இலங்கை அணியின் அஞ்சலோ மெத்யூஸ் தெரிவானார்.
நெதர்லாந்து அணியை 39 ஓட்டங்களுக்குள் வீழ்த்திய இலங்கை, சர்வதேச இருபதுக்கு-20 கிரிக்கெட் போட்டியொன்றில் அணியொன்றை குறைந்த ஓட்ட எண்ணிக்கைக்குள் வீழ்த்திய அணியென்ற உலக சாதனையை நிலைநாட்டியுள்ளது.
Sri Lanka consign Netherlands to record low
Perhaps no team in world cricket puts weaker sides away so emphatically as Sri Lanka. Since becoming full-fledged graduates from the easy-beats category in the mid-90s, they have spared no thought to their former peers, and on Monday they added two more world records to the small pile they have accumulated against easy-beats over the past 20 years. Netherlands' 39 all out is the lowest ever Twenty20 score. Sri Lanka chased the target in a record five overs.
Their domination of Netherlands was, strangely, almost as casual as it was unyielding. Nuwan Kulasekara's opening over was full of the kind of swing away from left-handers he generates almost every time he has early use of the white ball. Yet, this time, it would set in motion the most dramatic collapse the format has seen, as Stephan Myburgh outside-edged him to third man. Next over, Angelo Mathews delivered two unremarkable half-trackers back-to-back, and found himself on-a-hat-trick, as Michael Swart and Wesley Barresi fell attempting to attack. The floodlight malfunction that caused a nine-minute break in play seemed a greater obstacle to a Sri Lanka victory than their opponents did, with the bat. The number of runs did not exceed the number of wickets until the 20th ball of the innings.
Mathews would trap Peter Borren in front with an indipper in his next over - bringing about one of four ducks in Netherlands' innings - and that was all before Dinesh Chandimal sent his heavy cavalry in. Lasith Malinga struck the base of the middle stump twice, both times with the slower yorker. Ajantha Mendis had an expensive first over, but the Netherlands lower order played exactly like batsmen who have never faced his brand of mystery spin before. The googly accounted for two of his three wickets. Netherlands were all out in the 11th over.
Sri Lanka were given a harder time with the bat, as Kusal Perera was rapped painfully on the thumb by Timm van der Gugten before he fell for 14, but the chase was always going to be a formality. Tillakaratne Dilshan would have hoped to bat himself into form against a weaker attack but he only faced 11 balls. Sri Lanka will take the two points and the massive boost in net run rate, but even they may be disappointed at how quickly it all ended.

No comments:

Post a Comment