Thursday, February 6, 2014

தந்திர குணம் கொண்ட “எலிமான்”

ஆப்ரிக்காவின் ஈரப்பதமான காடுகளில் டிராகுலிடே என்னும் சிறிய வகை மான்கள் காணப்படுகிறது.
இவற்றிற்கு எலிமான் என்ற பெயரும் உண்டு, ஒரு எலியின் தோற்றத்தில் காணப்படுவதால் இந்த பெயரை பெற்றன.
ஒரு அடி பத்து அங்குல உயரத்திற்கு வளரும் இந்த மான்கள், வெளிர் மஞ்சள் நிறத்தில் காணப்படும், உடம்பில் புள்ளிகள் இருக்கும்.
இவைகளின் விசேட குணம் என்னவென்றால், சிங்கம், புலிகள் துரத்தினால் நீருக்குள் பாய்ந்து அதிவேகமாக நீந்தி தப்பிச்சென்று விடும்.
நீர் நிலைகள் இல்லாத இடங்களில் மாட்டிக் கொண்டால், சிங்கம், புலிகளால் பிடிக்க முடியாத மிக உயரமான கிளைகளை, தன்னுடைய பற்களால் பற்றிப் பிடித்துக் கொண்டு நீண்ட நேரம் தொங்கி கொண்டே தப்பித்து விடும்.
அதுமட்டுமல்லாமல் தன்னுடைய குட்டிகளை பாறைகளுக்கு அடியில் மறைத்து வைக்கும் தந்திர குணமும் கொண்டது.
சுமத்ரா தீவுகள், இந்தியா உள்ளிட்ட சில தெற்காசிய நாடுகளிலும் இவ்வகை மான்கள் காணப்படுகின்றன.

1 comment:

  1. வித்தியாசமான விலங்கினம் பற்றி பகிர்ந்தமைக்குப் பாராட்டுக்கள்..!

    ReplyDelete