Saturday, September 7, 2013

ஹிட்லரின் மெய்க்காப்பாளர் காலமானார்!

ஜேர்மன் சர்வாதிகாரி அடால்ஃப் ஹிட்லரின் மெய்க்காப்பாளர்(Bodyguard) ரோச்சஸ் மிஷ்(வயது 96) காலமானார்.
ஜேர்மனியின் பெர்லின் நகரில் உடல்நலக் குறைவால் சிகிச்சை பெற்று வந்த ரோச்சஸ், நேற்று காலமானார்.
இத்தகவலை அவரது ஏஜெண்ட் மைக்கேல் ஸ்டேல் தெரிவித்துள்ளார்.
இரண்டாம் உலகப் போரின் போது ஜேர்மனி வீழ்ச்சி அடைய தொடங்கியதும், ஹிட்லர் பெர்லினில் உள்ள பதுங்கு குழியில் தங்கியிருந்தார். அவருடன் அவரது மனைவி ஈவா பிரவுனும் உடனிருந்தார்.
ரஷ்யப் படைகளிடம் ஜேர்மனி சரணடைவதற்கு முன் ஹிட்லரும், அவரது மனைவியும் பதுங்கு குழிக்குள் தற்கொலை செய்து கொண்டனர்.
இந்தக் காட்சியை தனது கண்களால் நேரில் பார்த்ததாக ரோச்சஸ் மிஷ் கடந்த 2005ம் ஆண்டு அளித்த பேட்டியில் தெரிவித்தார்.
ஹிட்லரின் கடைசி நாள்களை நேரில் கண்ட ஒரே சாட்சியாக மிஷ் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment