Saturday, August 17, 2013

லண்டனில் BMW கார்களின் சைட் கண்ணாடியை அபேஸ் செய்யும் புதுவகை திருட்டு!

லண்டனில் சவுத்ஹால் பகுதியில் புதுவகையான திருட்டுச் சம்பவங்கள் நடைபெறுவதாக தெரிவிக்கப்படுகிறது. குறிப்பாக தமிழர்கள் பலர் BMW கார்களை வைத்திருப்பது சகஜமான விடையம். அப்படி BMW கார்களை வைத்திருக்கும் வீடுகளை சில கள்வர்கள் குறிவைத்துள்ளார்கள். இரவு நேரங்களில் அவர்களின் கார்களில் உள்ள சைட் கண்ணாடிகளை(மிரரரை) அப்படியே களற்றிச் செல்வதாக பல தமிழர்கள், தெரிவித்துள்ளார்கள். இத் திருட்டானது சமீபகாலமாக அதிகரித்திருப்பதாகக் கூறப்படுகிறது. இது லண்டன் சவுத்ஹால் பகுதியில் தான் கூடுதலாக நடைபெறுவதாகவும் மேலும் அறியப்படுகிறது.

BMW கார்களின் உதிரிப் பாகங்கள் மிகவும் விலை உயர்ந்தவை. இது இவ்வாறு இருக்கையில் கார்களின் சைட் கண்ணாடிகளை இவர்கள் திருடி, கறுப்புச் சந்தையில் விற்று வருவதாகக் கூறப்படுகிறது. எனவே இப் பகுதியில் இருக்கும் தமிழர்கள் , அதிலும் குறிப்பாக BMW வைத்திருக்கும் தமிழர்கள் மிகவும் ஜாக்கிரதையாக இருப்பது நல்லது. அத்துடன் காருக்கு அர்லாம்(Alarm) பொருத்திக்கொள்வது புத்திசாலித்தனமானது. கடந்த சில தினங்களுக்கு முன்னர், தமிழர் ஒருவரின் வீட்டுக்கு முன்னால் நின்ற BMW காரின், சைட் கண்ணாடியை இரவுவேளையில் ஒருவர் களவாடிச் சென்றுள்ளார். இருப்பினும் குறிப்பிட்ட அத் தமிழர் தனது வீட்டு வாசலில் ஏற்கனவே CCTV கமராவை பொருத்தி இருந்ததால் இத் திருட்டுச் சம்பவம் வீடியோவாகப் பதிவாகியுள்ளது.

தனது முகத்தை லேசாக மறைத்துக்கொண்டு ஒருவர் , கார் கண்ணாடியை களற்றிக்கொண்டு செல்லும் காட்சி, வீடியோவாகப் பதிவாகியுள்ளது. அக் கண்ணாடியை திருடுபவர் ஒரு தமிழராகத் தான் இருக்கவேண்டும் என்று, அந்த வீட்டின் உரிமையாளர் அதிர்வு இணையத்துக்கு மேலும் தெரிவித்துள்ளார்.


No comments:

Post a Comment