Sunday, August 25, 2013

அமெரிக்க கணவரால் கொலை செய்யப்பட்ட இலங்கைப் பெண்: சட்டத்தரணியை நியமித்தது இலங்கை தூதரகம்!


சவூதியில் அமெரிக்க கணவரால் கொலை செய்யப்பட்ட இலங்கைப் பெண் சார்பில் வாதாட ரியாத்தில் உள்ள இலங்கை தூதரகம் சவூதி சட்டத்தரணி ஒருவரை அமர்த்தியுள்ளது.
இலங்கையில் அம்பாறை மாவட்டத்தைத் சேர்ந்த அமரலதா என்ற 41 வயதான பெண் அமெரிக்க பொறியிலாளரை திருமணம் செய்திருந்தார்.
குடும்பத்தில் ஏற்பட்ட தகராறு காரணமாக இலங்கை பெண்ணை அமெரிக்க கணவர் கொலை செய்து விட்டதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
அமரலதாவின் கொலை தொடர்பாக விசாரணைகளை நடத்திய சவூதி அதிகாரிகள் அமெரிக்க கணவரை கைது செய்தனர். இந்த நிலையில் கொலையுண்ட இலங்கை பெண் சார்பில் தாம் சவூதி சட்டத்தரணி ஒருவரை நியமித்துள்ளதாக ரியாத்தில் உள்ள இலங்கை தூதரகம் வளைகுடா செய்தி நிறுவனம் ஒன்றிடம் நேற்று தெரிவித்துள்ளது.
2010 ஆம் ஆண்டு சவூதியின் தஹமம் பிரதேசத்தில் கொலை செய்யப்பட்ட அமரலதா, வீட்டுப் பணிப்பெண் வேலைக்காக சென்றிருந்தார்.
ஏற்கனவே திருமணம் செய்திருந்த அமரலதாவுக்கு இரண்டு பிள்ளைகள் உள்ளதுடன் அவர் விவாகரத்து செய்திருந்தார். இந்த நிலையில் அவர் சவூதியில் அமெரிக்கரான பொறியிலாளரை திருமணம் செய்து கொண்டார்.
குற்றம் சுமத்தப்பட்ட நபர் கொலைக்கான இழப்பீட்டு பணமாக 10 ஆயிரம் அமெரிக்க டொலர்களை வழங்க வேண்டும் என இலங்கை தூதரகம் கோரிக்கை விடுத்திரு்நதது.
குற்றவாளியிடம் இழப்பீட்டை செலுத்த பணம் இல்லை எனவும் அவர் 10 ஆயிரம் ரூபா இலங்கை பணத்தை செலுத்த தயாராக இருப்பதாக அவர் சார்பில் ஆஜரான சட்டத்தரணி நீதிமன்றத்தில் தெரிவித்தார். இதனால் இந்த பிரச்சினைகள் நீதிமன்றத்தில் தீர்வுகாணப்படவில்லை.
இந்த நிலையில் பெண்ணுக்காக வாதாட சட்டத்தரணி ஒருவரை இலங்கை தூதரகம் நியமித்துள்ளது. குற்றவாளியான அமெரிக்கர், கிறிஸ்தவராக இருந்து இஸ்லாம் மதத்தை தழுவிக்கொண்டார். அவர் தனது மனைவியை கொன்று அந்த உடலை எரிவாயு மற்றும் பெற்றோலியத்தை எடுத்துச் செல்லும் குழாயில் மறைத்து வைத்திருந்தார்.
இந்த நிலையில், குற்றவாளி பணியாற்றிய நிறுவனத்தின் குழாய் ஒன்றில் சடலம் ஒன்று இருப்பதாக சவூதியின் தெற்கு மாகாண பொலிஸாருக்கு அந்த நிறுவனம் தெரியப்படுத்தியதை அடுத்து இந்த கொலை சம்பவம் வெளிச்சத்திற்கு வந்தது. சீன மற்றும் சவூதி தொழிலாளர்கள் வழங்கிய தகவல்ளை அடுத்து குற்றவாளிகளை பொலிஸார் கைது செய்தனர்.
- See more at: http://www.tamilwin.net/show-RUmryIRZMVfp1.html#sthash.sLAWGUvS.dpuf

No comments:

Post a Comment