Monday, August 12, 2013

விரட்டிய "ஜெ" விடாத விஜெ!


"தலைவா... வா'ன்னா அவ்வளவு சீக்கிரம் வந்திட முடியுமா ? வரத்தான் விட்டுடுவாங்களா ? தடை தாண்டுவதற்குள் தலைசுத்தி விட்டது "தலைவா' விஜய்க்கு !

ஏன் இத்தனை தடை ? விடை தேடி விசாரணையில் இறங்கினோம்.

கடந்த ஜூலை 20 தேதி சில தமிழ் நாடு பத்திரிகைகளில் அட்டைப்படக் கட்டுரையில் அரசியல் "டச்'சுடன் எம்.ஜி.ஆர். பாணியில் விஜய்யின் "தலைவா' படம் எடுக்கப்பட்டிருப்பது பற்றி எழுதப்பட்டிருந்தது. இதனால் படத்துக்கு சிக்கல் வரும் என்று பலர் அப்பவே கூறியிருந்தார்கள்.

இந்நிலையில் இரண்டு வாரங்களுக்கு முன்பு படத்தை தணிக்கைக் குழுவிற்கு அனுப்பியிருந்தனர். "படத்தில் வன்முறை காட்சிகள் இருப்பதால் "யு/ஏ' சான்றிதழ்தான் தரமுடியும்!' என தணிக்கைக் குழு சொன்னது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ரிவைஸிங் கமிட்டிக்கு அப்ளை செய்தது படக்குழு! அங்கும் சில காட்சிகளை வெட்டினால் "யு' இல்லேன்னா "யு/ஏ' சான்றுதான் எனச் சொல்லிவிட்டனர். "யு' இருந்தால்தான் வரிவிலக்கு கிடைக்கும். இதனால் வெட்டிக் கொள்ள சம்மதித்து "யு' சான்றிதழ் பெற்றனர்.

முதலில் இந்தப் படத்தை தணிக்கைக் குழுவினர் பார்த்தபோதே மறைமுக மாக ஆளும் கட்சி அட் டாக்குடன் சில வசனங்கள் இருப்பதாக யூகித்த சென்ஸார் உறுப்பினர்கள் சிலர் "இது சிக்கலை உண்டாக்குமே. அதை அவாய்ட் பண்ணுங்களேன்!' எனச் சொன்னார்களாம். "அதை தவிர்த்து விடுகிறோம்' எனச் சொல்லியிருக்கிறார்கள் படத் தரப்பில். இந்த விஷயம் உளவுத் துறைக்கு எட்ட... அவர்கள் அரசுக்கு "நோட்' அனுப்பிவிட்டனர். "எத்தனையோ பேருக்கு இந்த சீட்டை குடுத்திருக்கீங்க...

பிறகு என்ன கொட நாட்டில் இருக்கும் அம்மா காதுகளில் சங்கூதியுள்ளார்கள் சிலர். அவ்வளவு தான் அடுத்தடுத்து அட்டாக்..... ஒரு ஆனால் விடவில்லை விஜெய்.... ஒரு மாதிரியா படத்தை தற்போது ரிலீஸ் செய்துவிட்டார்கள். ஆனால் கதை தான் கொஞ்சம் சொதப்பலாக இருக்கு என்று ரசிகர்கள் கூறுகிறார்கள். விஜெய் எதிர்பார்த்த அளவி தலைவா எழும்பாது என்பது தற்போது புலனாகிறது.

No comments:

Post a Comment