Monday, August 12, 2013

முன்னேஸ்வரம் சிவன் கோயில் வளாகத்திலிருந்து மனித எச்சம் மீட்பு!

முன்னேஸ்வரம் சிவன் கோவில் புதைக்கப்பட்டிருந்த நிலையில் இருந்த மனித எச்சம் ஒன்று தோண்டி எடுக்கப்பட்டு, மரபணு பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
இந்த மனித எச்சம் ஏற்கனவே 3 வருடங்களுக்கு முன்னதாகவே ஆலயத்தின் திருத்தப் பணிகளுக்காக மண்ணை தோண்டும் போது கண்டுபிடிக்கப்பட்டிருந்தது.
எனினும் பரிசோதனைகளுக்காக இந்த இடத்தை மீண்டும் தோண்ட வேண்டாம் என்று ஆலய நிர்வாகத்திடம் இலங்கை புதைப்பொருள் ஆய்வு திணைக்களம் கோரி இருந்தது.
ஆனால் அண்மையில் இடம்பெற்ற ஆலயத்தின் பூஜைகளை முன்னிட்டு, மீண்டும் அந்த இடத்தில் மண் தோண்டப்பட்டதைத் தொடர்ந்து, அதில் இருந்து எச்சம் மீட்கப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து அந்த எச்சத்தை மரபணு பரிசோதனைக்கு உட்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இந்த எச்சம் கடந்த 1605ம் ஆண்டில் போர்த்துக்கேயரால் கொல்லப்பட்டதாக கூறப்படும் பிக்கு ஒருவருடையதாக இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.

http://www.tamilwin.net/show-RUmryISWMVmv6.html

No comments:

Post a Comment