Friday, August 2, 2013

முற்பகல் செய்தால் பிற்பகல் விளையும் என்பதா?-சேரன் மகள் அப்பா மீதே கொலை முயற்சி வழக்கு!!


முற்பகல் செய்தால் பிற்பகல் விளையும் என்பதா?,வளர்த்தகடா மார்பில் பாயுதென்பதா?தாய் எட்டடி பாய்ந்தால் குட்டி பதினாறடி பாயும் என்பதா?அடுத்தவரின் பாதையில் முள்ளைத்தூவினால் இப்படித்தான் சொந்தச்செலவில் சூனியம் கிடைக்கும்!!பெற்றோரை சாவடிப்பதே இன்றைய பிள்ளைகள் இலட்சியம்!!காமத்தால் இவர்கள் இன்று செய்யும் துரோகத்துக்கு அறுவடை இவர்கள் பிள்ளைகள்தான்!!நாளை அனுபவிக்கும் பொது வலி புரியும்!ஆதரிக்கும் நாதாரிகளும் அவர்கள் குழந்தைகளாலேயே நிச்சயம் தண்டிக்கப்படுவர்!!பாசத்தால் காதலை ஒதுக்கும் பிள்ளைகளை பெற்ற பெற்றோர் உண்மையில் புண்ணியவான்களே!!செய்த பாவத்தின் பலன்களே பிள்ளைகள்!!

என்னுடைய காதலனை அப்பா கொல்ல பாக்கிறார் சேரன் மகள் புகார் -பரபரப்பு video


/
“காதலிக்கிறேன்” என்று சொல்லி விட்டாலே கண்ணை மூடிக்கொண்டு ஆதரித்து தான் ஆக வேண்டும் என்று நினைப்பவன் வடிகட்டிய முட்டாளாக தான் இருக்க வேண்டும்.சாதிக்காக காதலை தடுத்தால் அது பெரிய அவமானம் தான்.ஆனால் ஒரு வேலைக்கு ஆள் எடுக்கும் போது கூட அவனை பற்றி ஆயிரம் விசயங்களை அலசி ஆராய்கிறார்கள். 8 மணி நேரம் வேலை செய்துவிட்டு போகிற ஒருவனையே அத்தனை விசயங்கள் அலசி ஆராய்ந்து விட்டு பிடித்திருந்தால் தேர்வு செய்கிறார்கள் என்கிற பொழுது தன் மகளுக்கு கணவனாக வரப்போகிறன் எப்படி இருக்க வேண்டும் என தீர்மானிக்க ஒரு தந்தைக்கு உரிமை இல்லையா.
இனக்கவர்ச்சிக்கு நல்லவனா கெட்டவனா என பகுத்தறியும் பக்குவம் நிச்சயம் கிடையாது.அவன் குடிகாரனாக பொறம்போக்காக இருந்தாலும் கூட அது பெரிதாக தெரியாது.ஒரு குடிகாரனுக்கு காதல் வந்து விட்டாலும் உடனே கூட்டி சென்று அவன் வீட்டில் விட்டு விட்டு வர வேண்டும் என நினைப்பது அபத்தம். பாலின கவர்ச்சி தீர்ந்து போன பிறகு அழுது ஒப்பாரி வைத்துக் கொண்டு பிறந்த வீட்டிற்க்கு தானே ஓடி வருவார்கள்.
இதயெல்லாம் முன் கூட்டி யோசிக்கும் சக்தி இல்லாத வயதில் ஒரு தந்தையாக அறிவுரை சொல்வது பெரிய சமூக குற்றமா?.

அண்ணன் சேரனை நான் நன்கு அறிந்தவன்.அவர் ஒரு விசயத்தை செய்கிறார் என்றால் ஆயிரம் முறை சிந்திப்பார்.அவர் சிறந்த முற்போக்குவாதி.அவரது மகள்களை இந்த வயதான பிறகும் குழந்தகளை போலவே வளர்த்தார் .அதுவும் அவருடைய இளைய மகள் என்றால் அவருக்கு உயிர்.காதலுக்கு ஆட்சேபனை தெரிவித்திருக்கிறார் என்றால் நிச்சயம் பல சரியான காரணங்கள் இருக்கும்.சேரன் அண்ணனை பற்றி வரும் செய்திகளையும் அதற்க்கு வரும் மோசமான கமெண்ட்களையும் பார்க்கும் போது வேதனையாக இருக்கிறது.

முகநூல் தோழர்களே நமக்கு திட்டுவதற்க்கு யாரவது கிடைத்து விட்டால் சலிக்கும் வரை திட்டுவது நமக்கு பொழுது போக்கு.ஆனால் அவரது மகள் ஒரு நாள் “ அப்பா நீங்கள் சொன்னது சரி தான்.நான் வீணாக ஏமாந்து விட்டேன்|” என்று அழுது கொண்டு வந்தால் அது செய்தி ஆகாது,நமக்கு தெரியாது,இன்று அவரை வசை பாடியதற்க்கு மன்னிப்பு கேட்க முடியாது,கேட்பதாலும் எதுவும் மாறிவிடாது.

முகநூல் நண்பர்களே ..காதல் என்று வந்து விட்டால் எதை பற்றியுமே சிந்திக்க மாட்டேன் என்பவர்களை விட,காதல் பற்றிய செய்திகளை கண்டாலே அதற்க்கு எதிர்பக்கமிருப்பவர்களை வில்லனை போல நினைப்பது மிகவும் முட்டாள் தனம்.உண்மை நிலையை என்னவென்று தெரியாமல் ஒரு நல்ல மனிதரை
விமர்சிக்காதீர்கள் உங்களை தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.

Sankagiri RajKumar-facebook!

No comments:

Post a Comment