Monday, August 12, 2013

யாழ். நல்லூர் கந்தசுவாமி ஆலய மகோற்சவம் இன்று கொடியேற்றத்துடன் ஆரம்பம்!

வரலாற்றுப் புகழ்பெற்ற யாழ். நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த மகோற்சவம் இன்று கொடியேற்றத்துடன் ஆரம்பமாகவுள்ளது. இன்று முதல் 25 நாட்கள் திருவிழா நடைபெறவுள்ளது.
கொடியேற்றத்துக்கான கொடிச்சீலை நேற்று ஆலயத்துக்குக் கொண்டுவரப்பட்டது. தலைமுறை தலைமுறையாக செங்குந்த மரபிலுள்ளவர்களிடமிருந்து ஆலயத்துக்குக் கொண்டுவரப்படுவது வழமை. இதற்கமைய நேற்றுக் காலை 7.30 மணிக்கு மங்கள வாத்தியங்கள் சகிதம் ஆலயத்துக்கு எடுத்துவரப்பட்டு ஆலயபிரதான சிவாச்சாரியாரிடம் ஒப்படைக்கப்பட்டது.
இன்று காலை 10 மணிக்கு கொடி யேற்றத் திருவிழா நடைபெறவுள்ளது. தொடர்ந்து 25 நாட்களும் விசேட பூஜைகள் நடை பெற்று சுவாமி வெளிவீதியுலாவும் இடம்பெறவுள்ளன.
10ம் திருவிழாவான மஞ்சத் திருவிழா இம்மாதம் 21ம் திகதியும்,
17ம் திருவிழாவான அருணகிரிநாதர் உற்சவம் 26ம் திகதியும்,
27ம் திகதி கார்த்திகைத் திருவிழாவும்,
20ம் திருவிழாவான கைலாசவாகனம் எதிர்வரும் 31ம் திகதி மாலை 5 மணிக்கும்,
21ம் திருவிழா செப்டெம்பர் 01ம் திகதி மாலை 5 மணிக்கு வேல்விமானத் திருவிழாவும்,
செப்டெம்பர் 3ம் திகதி மாலை 5 மணிக்கு சப்பறத் திருவிழாவும்,
செப்டெம்பர் 4ம் திகதி காலை 7 மணிக்கு தேர்த் திருவிழாவும்,
5ம் திகதி காலை 7 மணிக்குத் தீர்த்தத் திருவிழாவும்,
6ம் திகதி பூங்காவனமும் இடம்பெறவுள்ளன.
நல்லூர் திருவிழாவை முன்னிட்டு பக்தர்களுக்கான வசதிகளை வழமைபோல யாழ் மாநகரசபை ஏற்பாடு செய்து கொடுத்துள்ளது. விசேட பாதுகாப்பு ஏற்பாடுகளைப் பொலிஸாரும் மேற்கொண்டுள்ளனர்.

No comments:

Post a Comment