Sunday, August 25, 2013

லண்டனில் 9 வயது ஈழத்துச் சிறுவன் கணிதப் போட்டியில் சாதனை !


ஈழத்துச் சிறுவனான அபிநாவ் சந்திரமோன் (9 வயது) லண்டனில் இடம்பெற்ற கணிதப் போட்டியில் ஏ தரத்தில் சித்தியடைந்து சாதனை படைத்துள்ளார்.
இலங்கையைச் சேர்ந்த அபிநாவின் குடும்பம் ஜேர்மனியில் இருந்து 2006ம் ஆண்டில் லண்டனுக்குச் சென்றுள்ளனர்.
லண்டன் லூடொன் மாநிலத்தில் வசிக்கும் அபிநாவ், தனது 7வயதில் GCSE பாடத்தில் உயர் மதிப்பெண்களைப் பெற்று சாதனை படைத்தமை குறிப்பிடத்தக்கது.
இது குறித்து அபிநாவின் அம்மா வாணி சந்திரமோகன் கருத்து வெளியிடுகையில்,
நான் நிலவில் இருப்பது போல் உள்ளது. மகன் என்னிடம் சொல்லிக் கொண்டே இருந்தான் எனக்கு கணிதப் பரீட்சையில் ஏ தரம் கிடைக்குமென்று. மிகவும் நம்பிக்கையாக இருந்தான்.
விளையாட்டைப் போலவே இந்தப் பரீட்சையையும் விரும்பினான்.
உண்மையில் பரீட்சையை அவன் அதைப் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. எனது மகன் கணிதத்தை நேசிக்கின்றார். குறித்த பரீட்சைத் தாள் ஒரு மணித்தியாலமும் 45  நிமிடத்தையும் கொண்டது. ஆனால் அவர் ஒரு மணித்தியாலயத்தில் எழுதி முடித்துவிட்டதாக தெரிவித்தார்.
கணனி விளையாட்டைப் போல் இப்பரீட்சை இருந்ததாகக் மகன் குறிப்பிட்டார்.
நாங்கள் அவரிடம் எதனையும் திணிக்கவில்லை. அவர் எங்களுக்கு கிடைத்தது ஒரு பரிசாகவே கருதுகிறேன். ஏனெனில் முதலாம் வகுப்பில் படிக்கும் போதே அவரது ஆசிரியர், இவர் மிகவும் திறமையானவர் என்று தெரிவித்திருந்தார். விரைவில் புரிந்து கொள்ளக் கூடிய திறமை உண்டு எனக் குறிப்பிட்டார்.
http://www.tamilwin.net/show-RUmryIRYMVgs2.html#sthash.uGEmHWz7.dpuf

No comments:

Post a Comment