Wednesday, August 21, 2013

தொடர்ந்து 72 மணிநேரம் உழைத்தவர் பரிதாப மரணம்

தொடர்ந்து 72 மணிநேரம் கடுமையாக உழைத்த நபர் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இங்கிலாந்தின் கிழக்கு லண்டன் நகரில் உள்ள அமெரிக்க வங்கியில், ஜேர்மன் நாட்டை சேர்ந்த மோரிட்ச் எர்ஹார்ட்(வயது 21) என்பவர் பணியாற்றி வந்துள்ளார்.
நேற்றிரவு இவர் குளியலறையில் இறந்து கிடந்ததை பார்த்த நண்பர்கள் அதிர்ச்சி அடைந்து, பொலிசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
இதனையடுத்து விரைந்து வந்த அதிகாரிகள் சடலத்தை கைப்பற்றி விசாரணை நடத்தினர்.
விசாரணையில், மிக்சிகன் பல்கலைக்கழகத்தின் மாணவரான மோரிட்ச், கல்வித் திட்டத்தின் ஒரு பகுதியான வேலைப் பயிற்சியை பெறுவதற்காக லண்டனில் உள்ள அமெரிக்கன் வங்கியில் பயிற்சி எடுத்து வந்தார்.
இந்தப் பயிற்சியில் அவர் பகல், இரவு எனத் தொடர்ந்து பணிபுரிய வேண்டியிருந்தது.
இரண்டு வாரங்களில் அவர் தொடர்ந்து எட்டு மடங்கு வேலை பார்த்துள்ளார்.
இறந்து கிடப்பதற்கு 3 தினங்களுக்கு முன்புதான் கடைசியாக அவரது அறை நண்பர்கள் அவரை பார்த்துள்ளனர்.
அதன்பின் அவரை இறந்து கிடந்த நிலையில் தான் கண்டனர். வங்கியில் நடத்திய விசாரணையில் விடாமல் இரவு பகலாக 72 மணிநேரம் மோரிட்ச் பணிபுரிந்து விட்டு நள்ளிரவு அறைக்கு திரும்பியது தெரியவந்துள்ளது.
இதுகுறித்து மருத்துவர் ஒருவர் கூறுகையில், மோரிட்ச் இறந்ததற்கான சரியான காரணம் தெரியவில்லை.
ஆனால் தொடர்ந்து வேலை செய்ததால் வலிப்பு ஏற்பட்டு இறந்திருக்கலாம் என தெரிவித்துள்ளார். இச்சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

No comments:

Post a Comment