Saturday, August 17, 2013

நல்லூர் கந்தசுவாமி ஆலய 5 ஆம் நாள் திருவிழா !

நல்லூர் கந்தசாமி ஆலயத்தின் வருடாந்த மஹோற்சவத் திருவிழாவின் 5 ஆம் திருவிழா இன்று வெள்ளிக்கிழமை சிறப்பாக நடைபெற்றுள்ளது.
நல்லூர் ஆலயத் திருவிழாவில் 600 பொலிஸார் கடமையில்..!
நல்லூர் ஆலயத் திருவிழாக்காலங்களில் பொது மக்களுக்கு பாதுகாப்பு வழங்கும் முகமாக 600 பொலிஸார் கடமையில் அமர்த்தப்பட்டதாக என்று யாழ்.பிராந்தி சிரேஸ்ர பொலிஸ் அத்தியட்சகர்
மொகமட் ஜெப்ரி தெரிவித்தார்.
வெளிமாவட்டங்களில் இருந்தும் மேலதிகமாக பொலிஸார் வரவளைக்கப்பட்டுள்ளனர் என்றும், முக்கிய திருவிழா நாட்களில் தேவை ஏற்படின் பாதுகாப்பு கடைமையில் ஈடுபடும் பொலிஸாருடைய எண்ணிக்கை அதிகரிக்கப்படும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.
நேற்றுக் காலை யாழ்.பொலிஸ் நிலையத்தில் நடைபெற்ற வாராந்து ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு ஊடகவியலாளர் மத்தியில் கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு
தெரிவித்துள்ளார்.
இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், கடந்த வருடம் நடைபெற்ற நல்லூர் திருவிழாவில் பல திருட்டுக்கள் இடம்பெற்றன. அதில் சம்பவங்களுடன் தொடர்புடையவர்கள் கைது செய்யப்பட்டிருந்தனர்.
இதனால் இம்முறை திருட்டுக்களை முற்றுமுழுதாக தடுத்து நிறுத்திதக் கொள்ள அதிகளவான பொலிஸார் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். ஒரு தொகுதிப் பொலிஸார் சிவில் உடையில் கடமையில் உள்ளனர். வெளிமாவட்டங்களில் இருந்தும் மேலதிகமாக பொலிஸார் வரவளைக்கப்பட்டு கடமையில்  ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
மேலும் முக்கிய திருவிழாக்காலங்களில் மேலதிகமான பொலிஸார் கடமையில் ஈடுபடுத்தப்படவுள்ளதுடன், விசேட பாதுகாப்புச் சேவைகளும் நடாத்தப்படவுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment