Tuesday, July 23, 2013

கற்பழிக்கப்பட்ட பெண்ணுக்கு தண்டனையை ரத்து செய்தது துபாய் நீதிமன்றம்!

துபாயில் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட நோர்வே நாட்டு பெண்ணுக்கு 16 மாத சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.
நோர்வே நாட்டை சேர்ந்த மார்ட் டெபோரா டலேல்வ் என்ற பெண் கட்டிட உள் அலங்கார நிபுணராக பணிபுரிகிறார்.
டெபோரா கடந்த மார்ச் மாதம் 6ம் திகதி, தன்னுடன் பணிபுரிபவர்களுடன் வெளியே சென்றிருந்தார்.
அப்போது சக பணியாளர்கள் தன்னை பாலியல் பலாத்காரம் செய்து விட்டதாக பொலிசில் புகார் அளித்தார்.
ஆனால் பொலிசாரோ, டெபோரா பொது இடத்தில் பாலியல் உறவு கொண்டதாக கூறி அவர் மீதே வழக்கை திசை திருப்பியது.
இதனை தொடர்ந்து, டெபோராவுக்கு 16 மாத சிறைத்தண்டனி விதித்து துபாய் நீதிமன்றம் உத்தரவிட்டது.
பாதிக்கப்பட்ட தனக்கே தண்டனையா என அதிர்ந்த டெபோரா, மேல்முறையீடு செய்யப் போவதாக அறிவித்தார்.
மேலும் இந்த விவகாரம் உலகளவில் சர்ச்சையை ஏற்படுத்தியது.
இதனையடுத்து பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு தண்டனையை ரத்து செய்து துபாய் நீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.

No comments:

Post a Comment