Monday, July 8, 2013

முன் நாள் புலிகளுக்கு இலங்கை அரசு கடன் உதவி வழங்கவுள்ளது !

இலங்கையில் போராட்டம் கடந்த 30 ஆண்டுகளாக நடைபெற்றவேளை, பணத்தை வாரி இறைத்த புலம்பெயர் தமிழ் மக்கள் புலிகள் வெல்லப்பட்ட பின்னர் ஒருவகையான மனச்சோர்வை அடைந்துள்ளார்கள். சிங்களவர்கள் வெற்றிபெற்றுவிட்டதாக பல தமிழர்கள் இன்னும் நினைத்து வருகிறார்கள். இதில் சிலர் இனிப் போராட்டம் வெடிக்காது என்றும், மேலும் சிலர் அடிபணிவு அரசியலே நடைபெறவேண்டும் எனவும் எண்ணிவருகிறார்கள். இது தொடர்பாக புலம்பெயர் தேசங்களில் விவாதங்களும், சர்சைகளும் காணப்படுகிறது. இந்த இடைவெளியைப் பயன்படுத்தி, இலங்கை அரசானது முன் நாள் புலிகளை தம்வசம் இழுக்க பெரும் திட்டங்களை தீட்டிவருகிறது. புனர்வாழ்வு பெற்று, தற்சமயம் ஏழ்மையான நிலையில் வாழ்ந்துவரும் முன் நாள் புலிகளை இலங்கை அரசு குறிவைத்துள்ளது.

இவர்கள் சுயதொழில் தொடங்க அரசு உதவும் என அறிவித்ததும் மட்டுமல்லாது சுமார் 53 கோடி ரூபாவை அதற்காக இலங்கை அரசு ஒதுக்கியுள்ளது. இதற்கான அனுமதியை இலங்கை அரசின் அமைச்சரவை ஒப்புக்கொண்டுள்ளது என அதிர்வு இணையம் அறிகிறது. சுமார் 4000 முன் நாள் போராளிகளுக்கு, நிதி உதவி வழங்கி அவர்களை சுயதொழில் செய்ய இலங்கை அரசு ஊக்குவிக்கவுள்ளது. இன் நடைமுறையானது கடுகதி வேகத்தில் நடைபெற்று வருகிறது. இன் நிலை நீடிக்குமேயானால், அவர்கள் புலம்பெயர் தமிழர்களை வெறுக்கும் நிலை தோன்றும். புலம்பெயர் நாட்டில் உள்ள தமிழர்கள் நினைத்திருந்தால், அவர்கள் ஆளுக்கு ஒரு முன் நாள் போராளியை தத்தெடுத்து, அவர்களுக்கான உதவிகளைச் செய்து வந்திருக்கலாம். ஆனால் போர்முடிவுற்று 4 ஆண்டுகள் ஆகியும் அதுபோன்ற ஒரு நிலை இதுவரை முழுமையாகத் தோன்றவில்லை.

இதனை தனக்குச் சாதகமாகப் பயன்படுத்திக்கொண்டு, இலங்கை அரசாங்கமானது முன் நாள் போராளிகளை தம்வசம் இழுக்க இதுபோன்ற திட்டங்களை அறிவித்து வருகிறது. புலம்பெயர் நாட்டில் உள்ள தமிழர்கள், முன் நாள் போராளிகள் தொடர்பாக தமது கவனத்தை திருப்புவது நல்லது. அவர்கள் வாழ்வில் மாற்றங்களை உண்டாக்குவதன் மூலமே நாம் எமது வெற்றி இலக்கை அடைய முடியும். ராம் நகுலன் கே.பி போன்ற , இனத் துரோகிகளுக்கு பணத்தை அனுப்பி முட்டாள் தனமாகச் செயல்படுவதை விடுத்து, முன் நாள் போராளிகள் கெளரவமாக வாழ புலம்பெயர் தமிழ்ச் சமூகம் முதலில் உறுதுணையாக இருக்கவேண்டும். போராட்டம் என்பது, எப்போது எங்கே எப்படி வெடிக்கும் என்பது யாருக்கும் தெரியாது ! அது நாளையும் வெடிக்கலாம், 4 வருடம் கழித்தும் வெடிக்கலாம். இல்லை என்றால் 40 வருடம் கழித்தும் வெடிக்கலாம். ஆனால் எமது சுதந்திர உணர்வுகள் மட்டும் என்றுமே அழியாது !


No comments:

Post a Comment